உ.பி:பைனாகுலரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையை 3 ஷிப்ட் போட்டு அகிலேஷ் வேட்பாளர்கள் கண்காணிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மூன்று ஷிப்ட் போட்டு கண்காணித்து வருகின்றனர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின.

எக்ஸிட் போல் முடிவுகள்
பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக குறைந்தது 100 இடங்களை பறிகொடுக்கும் என்றும் அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.

வாக்குப் பதிவு இயந்திர புகார்கள்
உத்தரப்பிரதேசத்தில் வாக்குப் பதிவுகளின் போதே, அகிலேஷ் யாதவின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரைக்கு வாக்களித்ததாக ஒப்புகைச் சீட்டு காட்டுகிறது என்கிற புகார்கள் வந்தன. ஆனால் தேர்தல் அதிகாரிகள் இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தனர். தமிழகத்தைப் போல வாக்குப் பதிவு இயந்திரங்களை அதற்கான நெறிமுறைகளுடன் கையாளுகிற மாநிலம் பாஜக அல்ல. இதனை எதிர்க்கட்சிகளும் இதுவரை பெரிதாக கையில் எடுத்துக் கொண்டது இல்லை.

பைனாகுலர் மூலம் கண்காணிப்பு
இந்நிலையில் உ.பி.யில் பல இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பிரசார வேனில் ஏறி நின்றபடி பைனாகுலர் மூலமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்கின்றனர். இது தொடர்பாக ஹஸ்தினாபூர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மா கூறுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். வாக்குப் பதிவு இயந்திரங்களை சுற்றிய நடமாட்டங்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். 8 மணிநேரத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 3 ஷிப்ட் போட்டு பைனாகுலர் மூலம் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து நம்பிக்கை இல்லை. சமாஜ்வாதி கட்சியே உ.பி.யில் ஆட்சி அமைக்கும். அகிலேஷ் யாதவ்தான் மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

ஜெயந்த் சவுத்ரி விளக்கம்
இதனிடையே அகிலேஷ் யாதவின் கூட்டணி கட்சியான ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறுகையில், எக்ஸிட் போல் முடிவுகள் எப்படி எடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்போது எக்ஸிட் போல் வெளியிட்டவர்கள் யாரும் வாக்கு சாவடிகளுக்கு வந்ததும் இல்லை. எக்ஸிட் போல் முடிவுகளும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெவ்வேறானதாகவே இருக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு ஒருவித அச்சத்தால் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதாகவும் பலரும் சொல்லி இருக்கலாம் அல்லவா? என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications