லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி தேர்தலில் பந்தயம் வைத்து.. பைக்கை இழந்த சமாஜ்வாதி தொண்டர்.. அகிலேஷ் யாதவ் தந்த சர்ப்ரைஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் எனக்கூறி பந்தயத்தில் தோற்ற அக்கட்சி தொண்டர் தனது பைக்கை பாஜக தொண்டரிடம் இழந்தார். இதுபற்றி அறிந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவருக்கு தங்க சங்கிலி வழங்கியதோடு, பந்தயங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பினார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ல் வெளியாகின. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது.

பணிமாறுதல் பெற்ற 5 ஆசிரியர்கள்... கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட அரசுப்பள்ளி மாணவிகள்.. நெகிழ்ச்சிபணிமாறுதல் பெற்ற 5 ஆசிரியர்கள்... கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட அரசுப்பள்ளி மாணவிகள்.. நெகிழ்ச்சி

உத்தர பிரதேசம் உள்பட மற்ற 4 மாநிலங்களில் பாஜக வாகை சூடியது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

கவனம் பெற்ற உத்தர பிரதேசம்

கவனம் பெற்ற உத்தர பிரதேசம்

இந்த 5 மாநில தேர்தல்களில் உத்தர பிரதேச தேர்தல் அதிக கவனம் பெற்றது. ஏனென்றால் இது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். மேலும் 403 சட்டசபை தொகுதிகளில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் அது 2 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு கைக்கொடுக்கும் என்பது தான் முக்கிய காரணம்.

பந்தயங்கள்

பந்தயங்கள்

இதனால் உத்தர பிரதேச தேர்தலை மையப்படுத்தி சூதாட்டங்கள், பந்தயங்கள் நடந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக கட்சி தொண்டர்கள் பந்தயம் கட்டினர். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார், மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும், பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்பட பிற கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை மையமாக வைத்து பந்தயங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பைக், டெம்போ

பைக், டெம்போ

இதில் உத்தர பிரதேச மாநிலம் பாண்டா பகுதியை சேர்ந்த அவாதேஷ் என்பவர் சமாஜ்வாதி கட்சியின் தீவிரமான தொண்டர். இவர் பாஜகவை சேர்ந்த தொண்டரிடம் பந்தயம் கட்டினார். அதாவது சமாஜ்வாதி தான் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என அவாதேசும், பாஜக தான் ஆட்சிக்கு வரும் என பாஜகவை சேர்ந்தவரும் கூறினர். அத்துடன் அவாதேஷ் தனது பைக்கையும், பாஜகவை சேர்ந்தவர் டெம்போவையும் பந்தயமாக கட்டினர்.

பைக் இழந்த சமாஜ்வாதி தொண்டர்

பைக் இழந்த சமாஜ்வாதி தொண்டர்

மார்ச் 10ல் வெளியான தேர்தல் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பாஜக தொண்டரிடம் அவாதேஷ் தனது பைக்கை இழந்தார். இதனால் அவர் மனவருத்தம் அடைந்தார். மேலும், தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருந்தால் அகிலேஷ் யாதவ் முதல்வராகி இருப்பார். நானும் பந்தயத்தில் வெற்றி பெற்று டெம்போவை கைப்பற்றி இருப்பேன் என கூறி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அகிலேஷ் யாதவின் பரிசு

அகிலேஷ் யாதவின் பரிசு

இதுபற்றி அறிந்த அகிலேஷ் யாதவ், அவாதேசை அழைத்து அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து அவாதேஷ் கூறுகையி்ல, ‛‛தேர்தல் தொடர்பான பந்தயத்தில் தோற்றதால் பைக்கை பாஜக தொண்டரிடம் பறிகொடுத்தேன். இந்நிலையில் தான் அகிலேஷ் யாதவிடம் இருந்து போன் வந்தது. நான் சென்றபோது அவர் என்னை மரியாதையை நடத்தியதை ஒருபோதும் மறக்க மட்டேன். மேலும் எனக்கு தங்க சங்கிலியை வழங்கினார். மேலும் பந்தயம் கட்டக்கூடாது என அன்பு கட்டளையிட்டார். '' என்றார்.

எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி

எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி

முன்னதாக உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
SP Supporter Loses Bike in election bet, akilesh yadav gifts him gold chain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X