நொய்டா கட்டிட இடிப்பு.. "எல்லாம் போச்சு".. ஒப்புதல்களை பெற்றுத்தானே கட்டினோம்.. புலம்பும் ஓனர்!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் சற்று நேரத்திற்கு முன்னர் தகர்க்கப்பட்ட நிலையில், இந்த கட்டிடங்களை கட்டிய 'சூப்பர்டெக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைவர் ஆர்.கே.அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து இந்த கட்டிடம் இன்று இடிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிட இடிப்புக்கு பின்னர் தேங்கும் 35,000 கன மீட்டர் இடிபாடுகள் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்றாண்டுகளாக கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் தற்போது 9 விநாடிகளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 40 தளங்களை கொண்டுள்ளது. ஆனால் இது பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிலபல பாதுகாப்பு காரணங்களுக்காக ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போய் தற்போது ஒருவழியாக இடித்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கட்டிடம் இடிப்பு குறித்து இதனை கட்டியெழுப்பிய 'சூப்பர்டெக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைவர் ஆர்.கே.அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கடந்த 2009ல் அப்போதைய மாநில அரசாங்க விதிகளின் ஒப்புதலுக்கு இணங்க இந்த அபெக்ஸ் மற்றும் செயேன் எனும் இரண்டு கட்டிடங்கள் நொய்டாவில் கட்டப்பட்டன. நொய்டா மாநகராட்சி சார்பில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என அரோரா கூறியுள்ளார். அதேபோல இந்த கட்டிட இடிப்புகள் இந்நிறுவனத்தின் இதர கட்டுமான பணிகளை ஒருபோதும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த கட்டுமான திட்டத்தில் எவ்வித மாற்றங்களும் திருத்தங்களும் செய்யப்படவில்லையென்றும், கட்டுமானம் தொடர்பான ஆணையத்திடம் முழு பணத்தையும் கொடுத்த பின்னரே கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் தொழில்நுட்ப அடிப்படையில் கட்டுமானம் திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியாததையடுத்து நீதிமன்றம் இதனை இடிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை நாங்கள் 70,000க்கும் அதிகமான கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளோம்.
இன்னும் நிறையபேருக்கு கட்டிடங்கள் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இது ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக கட்டி கொடுக்கப்படும். தற்போது வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு யாரையும் பாதிக்காது. மேலும் அதிகமான கட்டுமானகளை கட்டி கொடுக்கவும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என அரோரா தனது அறிக்கையில் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து சூப்பர்டெக் நிறுவனத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications