யாரும் என் பொண்டாட்டியை பார்க்க கூடாது.. தலையை மொட்டை அடித்து.. ரூமுக்குள் பூட்டி வைத்த விநோத கணவன்
மனைவி தலைமுடியை வெட்டிய கணவர் தலைமறைவாகி விட்டார்
லக்னோ: தன் மனைவி அழகாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த கணவன், அவரது முடியை வெட்டிவிட்டார்.. அந்த கொடுமை உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மீரட் நகரை சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷினி... கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது. ஆரிப்பை விட ரோஷினி ரொம்ப அழகாக இருப்பாராம்... அதனால் தாழ்வு மனப்பான்மையில் விழுந்துவிட்டார் ஆரிப்.. இது போக சந்தேக குணமும் ஆரம்பமாகி உள்ளது.

மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ள உறவு இருக்குமோ என்ற சந்தேகம் அதிகமாகி விட்டது.. அதனால் வீட்டை விட்டு ரோஷினியை எங்குமே அனுப்பவில்லை.
அழகாக இருப்பதால்தானே மனைவியை அடுத்தவர்கள் பார்க்கிறார்கள் என்று நினைத்து, ரோஷினி தலைமுடியை வெட்டிவிட்டார்.. பிறகு ஒருநாள் திடீரென மொட்டையே அடித்துவிட்டார்.. வீட்டில் ஒரு ரூமில் தினமும் பூட்டி வைத்துவிட்டுதான் ஆபீசுக்கு போய்வந்தார் ஆரிப்.
ஒருநாள் இந்த தொல்லையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் தப்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார் ரோஷினி.. கணவன் தந்த கொடுமை குறித்து போலீசில் புகாரும் தந்தார். "எதுக்கெடுத்தாலும் தன்னை அடிப்பார், காரணமே இருக்காது.. மாமியாரும், புருஷனும் சேர்ந்து எனக்கு மொட்டை அடித்துவிட்டனர், ரூமில் அடைத்து பூட்டிவிட்டனர்" என்று போலீசில் கண்ணீருடன் கூறினார் ரோஷினி.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் ஆரிப் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். மனைவி அழகாக இருப்பதால் ஆத்திரம், சந்தேகத்தில் கணவன் தந்த சித்ரவதை மீரட் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications