ஹெல்ப் பண்ணுங்க.. லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! காருக்குள் மிருகமான ஓட்டுனர்! ஷாக் உ.பி!

Subscribe to Oneindia Tamil

லக்னோ : பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில் தற்போது நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்றுதான் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் உத்திர பிரதேசத்தில் நிலைமை இன்னும் மோசம்.

உபியில் அதிர்ச்சி

உபியில் அதிர்ச்சி

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல் அவரை கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் ஜெய்ஹிந்த் ஊர் பகுதியில் பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

அந்த கல்லூரியில் பிடெக் படிக்கும் 23 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தான் இந்த கொடூர சம்பவத்தில் சிக்கி இருப்பவர். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை கல்லூரியில் வகுப்புகளை முடித்துவிட்டு மாணவி வீடு திரும்பி இருக்கிறார். சாலையில் போக்குவரத்து இல்லாத நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்த மாணவி தனக்கு லிப்ட் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

காருக்குள் கொடூரம்

காருக்குள் கொடூரம்

இதை அடுத்து காரில் வந்தவர் மாணவியை காரில் ஏற்றிக் கொண்ட நிலையில் அதன் பின் மாணவி செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல் வேறு வழியில் சென்ற அந்த நபர் காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கதறி துடித்த அந்த மாணவி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த நிலையில், அந்த மாணவியை மர்ம நபர் அங்கிருந்த சாலையோர கால்வாயில் தூக்கி வீசி இருந்திருக்கிறார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்த நிலையில் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அந்த மாணவி தனது வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+