'அரசாங்கத்த விட கட்சியே நமக்கு பெரியது'.. உத்தர பிரதேச பாஜக தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அரசாங்கத்த விட கட்சியே நமக்கு பெரியது என்றும் முதலில் தோல்வி அடைந்த இடங்களில் வெற்றி பெற போராட வேண்டும் என்றும் உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி கூறியுள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.

உத்தர பிரதேச பாஜகவின் புதிய தலைவராக கடந்த மாதம் 25 ஆம் தேதி பூபேந்திர சிங் சவுத்ரி அறிவிக்கப்பட்டர்.

 புதிய தலைவராக

புதிய தலைவராக

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் பஞ்சாயத் ராஜ் அமைச்சராக இருக்கும் பூபேந்திர சிங் சவுத்ரி, தற்போது பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ளது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த ஸ்வதந்திர தேவ் சிங், தனது பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து புதிய தலைவராக பூபேந்திர சிங் சவுத்ரி அறிவிக்கப்பட்டார்.

நமக்கு கட்சியே பெரியது

நமக்கு கட்சியே பெரியது

ஜட் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர சிங் சவுத்ரி உத்தர பிரதேசத்தின் மொரோதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மாநில பாஜக தலைவராக பொறுபேற்றதில் இருந்து கட்சியினரை சந்தித்து வரும் பூபேந்திர சிங் சவுத்ரி, பாஜகவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், பூபேந்திர சிங் சவுத்ரி பாஜகவினர் மத்தியில் பேசுகையில், ''அரசாங்கத்தை விட நமக்கு கட்சியே பெரியது என்றும் தோல்வி அடைந்த இடங்களில் வெற்றியை பெறுவதற்காக பணியாற்ற வேண்டும்'' என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

கட்சிகள்தான் ஆட்சியை அமைக்கின்றன

கட்சிகள்தான் ஆட்சியை அமைக்கின்றன

இது குறித்து பூபேந்திர சிங் சவுத்ரி கூறியதாவது:- பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை அடிப்படையாக கொண்டே பாஜகவினர் நீண்ட காலமாக உழைத்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கத்தில்தான் மத்திய அரசும் மாநில அரசும் பணியாற்றி வருகிறத'' என்றார். இதற்கிடையே அரசாங்கத்தை விட கட்சியே பெரியது என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று பூபேந்திர சிங் சவுத்ரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சவுத்ரி, கட்சிகள்தான் ஆட்சியை அமைக்கின்றன.

 தியாகத்தின் விளைவுதான் ஆட்சி

தியாகத்தின் விளைவுதான் ஆட்சி

கட்சி தொண்டர்களின் உழைப்பு தியாகத்தின் விளைவுதான் ஆட்சியாக மாறுகிறது. நாங்கள் முதன் முதலாக கடந்த 1951 ஆம் ஆண்டு எங்கள் சித்தாந்தங்களின் படி ஜனசங்கத்தை தோற்றுவித்த போது, சில அம்சங்களை மனதில் வைத்திருந்தோம். அவற்றில் முதன்மையானது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை ஆகும். பிறகு இதில் ராமர் கோவிலும் இணைந்து கொண்டது.

விரைவில் நிறைவேற்றப்படும்

விரைவில் நிறைவேற்றப்படும்

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தபிறகு இந்த அஜெண்டாக்களை நிறைவேற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் பணி செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. நமது அஜெண்டாவை நிறைவேற்றுவதை நோக்கி நாங்கள் நிச்சயமாக நகர்ந்து வருகிறோம். பெரும்பாலான அஜெண்டாக்கள் நிறைவேற்றுப்பட்டு விட்டது. எஞ்சியவைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+