உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கனிம வளம்! 4ம் கட்ட ஏலம் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச அரசு மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை முழுமையாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை முழுமையாக பயன்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஏற்கெனவே மூன்று கட்டமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு ஏலங்கள் விடப்பட்டிருக்கின்றன. தற்போது அரசு 4வது கட்ட ஏலத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம கிடைக்கும் வருவாய் மாநிலத்தின் வளர்ச்சியை பெரிய அளவில் ஊக்குவிக்கும்.
அதேபோல வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். நான்காம் கட்டமாக 11 கனிமத் தொகுதிகள் ஏலம் விடப்படுகின்றன. இதில், அதிகபட்சமாக 10 தொகுதிகள் சோன்பத்ராவிலும், ஒரு தொகுதி புந்தேல்கண்டில் உள்ள லலித்பூரில் உள்ளது. சோன்பத்ராவில் 5 பிளாக்குகள் ஆண்டலுசைட், 2 பிளாக்குகள் தங்கம் மற்றும் 1 பிளாக் சில்லிமனைட், இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்பு கற்கள் உள்ளன.
அதேசமயம் லலித்பூரில் இரும்புத் தாது ஒரு தொகுதி உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், சிமென்ட் உற்பத்தியில் சுண்ணாம்பு முக்கிய பங்கு வகிக்கிறது, அதே சமயம் இரும்புத் தாது எஃகு தயாரிக்கும் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாகும். இது தவிர அடுத்த மாதம் மேலும் 4 தொகுதிகளை ஏலம் விட மாநில அரசு முடிவெடுத்துள்ளது" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications