அப்படியே அடியோடு மாறும் கோரக்பூர்! அசத்தும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் ஒரு காலத்தில் மாஃபியாக்களின் ராஜ்ஜியமாக இருந்ததாகவும், இப்போது அது அமைதியின் பக்கம் திரும்பியுள்ளது என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய பின்னர், மாநிலத்தில் ரவுடி, மாஃபியாக்களின் அட்டூழியங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு கூறி வருகிறது. இந்நிலையில், கோரக்பூர் ஒரு காலத்தில் மாஃபியாக்களின் ராஜ்ஜியமாக இருந்ததாகவும், இப்போது அது அமைதியின் பக்கம் திரும்பியுள்ளது என்று கோரக்பூர் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஜிஐடிஏ) தலைமை நிர்வாக அதிகாரி அனுஜ் மாலிக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூர், மாநிலத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக மாறி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் (ஜிஐஎஸ்) கோரக்பூருக்காக ரூ. 1.71 லட்சம் கோடியில் மொத்த 144 முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டன. இந்த திட்டங்களில் தற்போது 90 சதவிகிதம் நிறைவடைந்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் எதிர்வரும் 2027ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டும்.
இந்த வளர்ச்சிக்கு கோரபூர் மிகப்பெரிய பங்காற்றும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோரக்பூர் ரூ.25,000 கோடிக்கு மேல் முதலீடுகள் குவிந்திருக்கின்றன. பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் எனில், அவர்களுக்கு நிலம்தான் அடிப்படை தேவையாகும். ஆனால், கடந்த 2017க்கு முன்பு கோரக்பூர் நில மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நில மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனவே முதலீட்டாளர்களுக்கு இங்கு தொழில் தொடங்குவது எளியதாக மாறியது. இப்படித்தான் இந்த நகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications