சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) 15 நாள் பதிவு பிரச்சாரத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடங்கி வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலசைம்சராக பொறுப்பு வகித்திருந்தவார்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை.

இந்நிலையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் நோக்கி நகர்த்த யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இதற்காக பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியையும் கண்காணிக்கவும், அதில் தேக்கம் ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் புதிய யோசனை ஒன்றை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களை பதிவு செய்ய போர்ட்டல் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது.
தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தில்தான் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 90 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், ஆனால் இதில் வெறும் 14 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் சரியாக சென்று சேர்வதில்லை என்றும், இதனால் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்படலாம் எனவும் மாநில அரசு கூறியுள்ளது.
எனவே இந்த எம்எஸ்எம்இகளை ஒன்றிணைக்க இதுபோன்ற இந்த போர்டல் உதவும் என்பதால் இதில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை பதிவு செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 75 மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் 15 நாட்கள் வரை முகாம்கள் செயல்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications