பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து பலி “மருத்துவமனை அலட்சியமே காரணம்” - பகீர் புகார்.. உ.பியில் அவலம்!
லக்னோ : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் அலட்சியமே குழந்தையின் இறப்பிற்குக் காரணம் எனக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பச்சிளம் குழந்தையின் இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர்கள், மருத்துவர் தங்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தை
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள முதாரி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் மே 30ஆம் தேதியன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹோபாவில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தைப் பிறப்பிற்காகச் சென்றுள்ளார். அவருக்கு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

எறும்புகள் மொய்த்ததால்
பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் அனுமதித்தனர். குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் சுகாதாரம் இன்றி இருப்பதோடு எறும்புகளும் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பலி
ஆனால் அவர்களின் புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலட்சியமே காரணம்
பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை இறந்ததற்கு, எறும்பு கடித்ததே காரணம் என்றும், குழந்தையின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவர் அவர்களிடம் ரூ.6,500 லஞ்சம் வாங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications