கான்பூர் தாதா விகாஸ் துபேவின் 2 கூட்டாளிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தை அதிரவைக்கும் தாதா விகாஸ் துபேவின் 2 கூட்டாளிகள் போலீசாரின் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Recommended Video
கான்பூர் தாதா விகாஸ் துபேவை சுற்றி வளைத்து பிடிக்க போலீஸ் படை சென்றது. ஆனால் விகாஸ் துபேவுக்கு இந்த தகவல் முன்கூட்டியே கிடைத்தது.

இதனால் போலீசாரை உள்ளே வரவிட்டு விகாஸ் துபே கும்பல் மிக மோசமாக சுட்டுக் கொலை செய்தது. இதில் 8 போலீசார் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விகாஸ் துபே கும்பலை கூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விகாஸ் துபேவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர்.
Bahua Dubey, who was present with Vikas Dubey during #KanpurEncounter, killed in an encounter today morning. Arms recovered: SSP Etawah Akash Tomar. pic.twitter.com/8mh8XzQzli
— ANI UP (@ANINewsUP) July 9, 2020
இந்த நிலையில் போலீசார் பிடியில் இருந்து விகாஸ் துபேவின் கூட்டாளிகள் பிரபாத் மிஸ்ரா, பஹூவா துபே இருவரும் இன்று வியாழக்கிழமை தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாரை இருவரும் தாக்க முயன்றனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய தாக்குதலில் விகேஸ் துபேவின் கூட்டாளிகள் பிரபாத் மிஸ்ராவும் பஹூவா துபேயும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது விகாஸ் துபேவை தேடும் நடவடிக்கையை தீவிரமாக போலீசார் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications