உ.பி. சட்டசபைத் தேர்தல்: அகிலேஷ் யாதவ்- ஜெயந்த் சவுத்ரி கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுன் ஜெயந்த் சவுத்ரியில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் கூட்டணி அமைக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகிலேஷ் யாதவும் ஜெயந்த் சவுத்ரியும் இன்று அறிவிக்க உள்ளனர்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, ஏற்கனவே 7 ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாக்குகளை அறுவடை செய்ய இந்த வியூகத்தை பாஜக வகுத்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி கூட்டணி
பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. அதேநேரத்தில் உ.பி.யின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார்.

சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணி
இதனைத் தொடர்ந்து ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் அகிலேஷ் யாதவும் ஜெயந்த் சவுத்ரியும் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். இதன் அடுத்த கட்டமாக இருவரும் இன்று கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர். மீரட் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் என கூறப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சிக்கு சாதகம் என்ன?
உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இதில் 30 முதல் 35 இடங்களில் ராஷ்டிரிய லோக் தள் கட்சி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாட், முஸ்லிம்கள் இணைந்து நிற்கும் மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தால் பாஜக கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அகிலேஷ் யாதவும் ஜெயந்த் சவுத்ரியும் வியூகம் வகுத்துள்ளனர்.

கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
அகிலேஷ் யாதவ் தலைமையில் சிறிய கட்சிகள் இணைவது அக்கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதுவரையிலான தேர்தல் கருத்து கணிப்புகள், கடந்த தேர்தலை விட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்கின்றன. இருப்பினும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் சவாலாக இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications