உ.பி. சட்டசபை தேர்தல்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் குதித்த காங்...சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி!
லக்னோ: அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பணிகளை பாஜகவை பின்பற்றி காங்கிரஸும் தொடங்கி உள்ளது. தலித்துகள், சிறுபான்மையினர் வாக்குகளை ஒருங்கிணைக்க ஆலோசனை கூட்டங்களை காங்கிரஸ் நடத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக கட்சி ரீதியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் பிராமணர்களை சமாதானப்படுத்தும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அதேபோல் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிக நெருக்கமான முன்னாள் தலைமை செயலாளர் அனூப் சந்திர பாண்டே, தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குஜராத் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே. ஷர்மாவுக்கும் தேர்தலை முன்வைத்து கூடுதல் முக்கியத்துவம் வழங்குகிறது பாஜக.
பாஜகவை தொடர்ந்து சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தேர்தல் பணியில் குதித்துள்ளன. முஸ்லிம் வாக்குகளை குறித்து உலமாக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி இருக்கிறார் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லூ. உலமாக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டிருக்கிறோம். உபி. தேர்தல் அறிக்கையில் அவை இடம்பெறும் என்றார் அஜய்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இந்த முறை வெற்றி பெறும். பிரியங்கா காந்தி தலைமையில் உ.பி.யில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும் என்றும் நம்பிகை தெரிவித்தார் அஜய்குமார். காங்கிரஸ் கட்சியின் உலமாக்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் மணீஷ் சுக்லா, காங்கிரஸ் கட்சி ஏன் முஸ்லிம் வாக்குகளை மட்டும் குறிவைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதுதான். ஆனால் காங்கிரஸின் இந்த வியூகத்துக்கு மக்கள் சரியான பதிலடி தருவார்கள் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications