அடுத்த அதிரடி.. விவசாயிகளுக்கான நீர் ஆதார திட்டம்.. உ.பியில் இன்று தொடங்கி வைக்கிறார்.. பிரதமர் மோடி

சர்யு நஹார் தேசிய திட்டத்தை பிரதமர் மோடி உபியில் இன்று தொடங்கி வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: விவசாயிகளுக்கான நீர் ஆதார திட்டமான, சர்யு நஹார் தேசிய திட்டத்தை உத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.. இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற முடியும். 6,200 கிராமத்தைச் சேர்ந்த 29 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று நம்பப்படுகிறது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தலில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது..

இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் முக்கிய தொகுதியான உபி தேர்தலின் வெற்றி, தேசிய அரசியலையே நிர்ணயிக்கக்கூடியது..

பொறுப்பு

பொறுப்பு

அதனால்தான் கடந்த வருடமே பிரியங்கா காந்தியை இங்கு நியமித்து, மாநில பொறுப்பையும் அக்கட்சி மேலிடம் ஒப்படைத்திருந்தது.. அதன்படியே பிரியாங்கா களப்பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இவர்களால் தொடங்கப்பட்டு, நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு, அவைகள் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன..

 இன்று அடிக்கல்

இன்று அடிக்கல்

மேலும், பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வருகிறார்... காரணம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நலத்திட்டங்கள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.. அதனால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றன... இதற்காகவே பிரதமர் மோடி கடந்த மாதத்தில் இருந்து பலமுறை அங்கு சென்று வருகிறார்.. அந்த வகையில் இன்றும் உபி செல்கிறார்.

 5 நதிகள்

5 நதிகள்

இந்நிலையில், பல்ராம்பூர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்... அங்கு ரூ.9,800 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சர்யு நஹார் தேசிய திட்டத்தை திறந்து வைக்கிறார். இந்த திட்டமானது, ககாரா, சர்யு, ராப்தி, பங்காங்கா, ரோஹினி ஆகிய 5 நதிகளையும் இணைக்கக்கூடியது.. அந்த பகுதியில் இந்த திட்டம் மிகப்பெரிய நீர் ஆதாரத்திற்கு உதவியாக இருக்கும் என்றும், இத்திட்டம் மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, 6,200 கிராமத்தை சேர்ந்த 29 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று நம்பப்படுகிறது.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

1978-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டதாம்.. ஆனால், முந்தைய அரசுகளால் போதிய நிதி இதற்கு ஒதுக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.. தற்போதைய பாஜக அரசானது, 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதால், 40 வருடங்களுக்குபிறகு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.. இந்த திட்டத்தின் வெற்றியை நிச்சயம் பாஜக தனக்கு சாதகமாக வரப்போகும் தேர்தலில் பயன்படுத்தி கொள்ளும் என்றும், அதன்மூலம் காங்கிரசுக்கு ஜெர்க் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+