உத்தரப் பிரதேசத்தில் நிறைவடைந்த 2ஆம் கட்ட தேர்தல்! அமைதியான முறையில் நடந்து முடிந்தது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உ.பி.தான். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 55 தொகுதிகளில் பாஜக 38 இடங்களிலும் சமாஜ்வாதி 13 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் தலா இரு இடங்களிலும் வென்றது.

இந்த நிலையில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனால் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் முதற்கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் இந்த 58 தொகுதிகளில் அடங்கும். முதற்கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பாடான், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 தொகுதிகள் உள்ளன. இதில் தனித்தொகுதிகள் 9.
இந்த 586 வேட்பாளர்களில் 5 பேர் அமைச்சர்கள். இதில் ஷாஜஹான்பூரில் பாஜக சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சுரேஷ்குமார் கன்னா போட்டியிடுகிறார். அது போல் சந்தாசியில் அமைச்சர் குலாப் தேவி போட்டியிடுகிறார். அது போல் பாடானில் அமைச்சர் மகேஷ் சந்திர குப்தாவும், பஹேரியில் அமைச்சர் சத்ரபால் காங்வாரும் போட்டியிடுகிறார்கள்.
இத்தேர்தலில் மொத்தம் 2,01,42,441 பேர் வாக்காளர்கள். இவர்களில் 1,07,61,476 பேர் ஆண் வாக்காளர்கள். 93,79,704 பேர் பெண் வாக்காளர்கள். 1,261 பேர் மூன்றாம் பாலினத்தவர். பாஜக தலைமையில் ஜாதிய கட்சிகளும் சமாஜ்வாதியுடன், லோக்தளம் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் காண்கிறது. இந்த முறை ஓவைசியின் கட்சியும் போட்டியிடுகிறது.
9 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 9.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Recommended Video
11 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 23% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 39.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 51.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications