உ.பி.யில் 100 தொகுதிகளில் போட்டி- ஓம் பிரகாஷ் ராஜ்பார் கட்சியுடன் மட்டுமே கூட்டணி-ஓவைசி திட்டவட்டம்
ல்க்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தலைமையிலான கூட்டணியில் தங்களது மஜ்லிஸ் கட்சி இடம் பெறும் என்றும் அதன் தலைவர் ஓவைசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
உ.பி.யில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கட்சியிலும் பொதுமக்களிடத்திலும் அதிருப்தி இருக்கிறது. இதனால் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக யோகி மீண்டும் முன்னிறுத்தப்படமாட்டார் என்றே கூறப்படுகிறது.

மாயாவதி கட்சியில் பிளவு
பிற மாநிலங்களைப் போல எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு தொடக்கத்திலேயே தகர்ந்துவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவியதால் இந்த கூட்டணி அமையவில்லை.

தனித்தே போட்டி- மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். முன்னதாக ஓவைசி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் மாயாவதி இதனை நிராகரித்துவிட்டார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.

உ.பி. தேர்தலில் ஓவைசி கட்சி
இதனிடையே பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து வாக்குகளைப் பிரித்த ஓவைசி கட்சி உ.பி.யில் 100 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பீகாரில் 5 இடங்களில் வென்றதைப் போல உ.பி.யிலும் செல்வாக்கை காட்ட ஓவைசி கட்சி முயற்சிக்கிறது.

100 தொகுதிகளில் போட்டி
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓவைசி, ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் எஸ்.பி.எஸ்.பி கட்சியுடன் மட்டுமே கூட்டணி; பிற கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் 100 தொகுதிகளில் தமது கட்சி போட்டியிடும்; வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்றும் ஓவைசி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

3-வது அணி
ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் எஸ்.பி.எஸ்.பி கட்சியானது, பாபு சிங் குஷாவா தலைமையிலான ஜேஏபி, பாபு ராம்பால் தலைமையிலான ஆர்யுபி, பிரேம்சந்திர பிரஜாபதியின் ஆர்.யு.எஸ்.பி, அனில் சிங் சவுகானின் ஜே.கே.பி. ஆகிய கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியில் ஓவைசி கட்சி 100 இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications