உ.பி. தேர்தல்: உன்னவ் பலாத்கார வழக்கில் பாதித்த சிறுமியின் தாய் போட்டி.. பிரியங்கா காந்தி அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை இன்று மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இதில் உன்னவ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் ஆஷா சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு உன்னவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் என்பவரால் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் ஆஷா சிங்கிற்கு உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பிரியங்கா காந்தி வாய்ப்பளித்துள்ளார்.

ஹத்ராஸ்
உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி கூறுகையில் உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் உன்னவ் மற்றம் ஹத்ராஸ் மாவட்டங்களில் கூட்டு பலாத்கார சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி
இந்த வேட்பாளர் பட்டியல் மூலம் நாம் சொல்ல வருவது என்னவென்றால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணையாகவே இருக்கும் என பிரியங்கா காந்தி பேசினார். ஹாத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட தலித் சமூக பெண்ணின் குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடும் வகையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தயாரித்து வருகிறது.

17 வயது சிறுமி
பின்னணி சம்பவம்: உ.பி மாநிலத்தில் உன்னவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரை பாங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை காவல் துறை ஏற்க மறுத்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பு சிறுமி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இந்த விவகாரம் வெளியே வந்தது.

எம்எல்ஏ கைது
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாஜகவிலிருந்து குல்தீப் நீக்கப்பட்டார் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை பப்பு சிங் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறுமியும் அவரது வழக்கறிஞரும் சிறுமியின் உறவினர்களும் நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர்களது வாகனம் எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.

உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்
இந்த விபத்தில் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். சிறுமியை கொல்வதற்காக நடந்த சதி திட்டம் என்றே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதினார். அந்த சிறுமிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி மாவட்ட நீதிமன்றம்
இந்த பாலியல் பலாத்கார வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளை டெல்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் பலாத்கார வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் குற்றவாளி என கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு அதிலிருந்து ரூ 10 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications