உ.பி.யில் பயங்கரம்! பாஜக பிரிஜ் பூஷண் சிங் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பரிதாப பலி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளரான கரண் பூஷன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் பிஞ்சு குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டையே உலுக்கிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் பிரிஜ் பூஷன் சிங்கின் மகன்தான் கரண் பூஷன்.
இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமைகளை சேர்த்து பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்த வீரர்களும் வீராங்கனைகளும் டெல்லி தெருக்களில் நீதி கேட்டுப் போராடினர். மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜகவின் 6 முறை எம்பியான பிரிஷ் பூஷண் சிங்குக்கு எதிராகத்தான் இந்தப் போராட்ட நடைபெற்றது.

தேசத்துக்கு தலைநிமிர்வை ஏற்படுத்திய வீராங்கனைகளின் ஆவேச குரலுக்கு நீதி கிடைக்காமலே போனது. இதனால் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, பிரிஜ் பூஷண் சிங்கை பாதுகாத்தது. மானம் காக்கப் போராடிய மல்யுத்த மங்கைகளை தேசத்தின் புதல்விகளை நடுவீதிகளில் போலீசார் பட்டாளத்தால் ஒடுக்குமுறைகளை ஏவி நசுக்கியது.
இத்தகைய பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங்குக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்புக் கொடுத்தது. உத்தரப்பிரதேசத்தின் கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதியில் கரண் பூஷண் சிங் போட்டியிட்டுள்ளார்.
இந்த நிலையில் கரண் பூஷண் சிங்குடன் பாதுகாப்புக்குச் சென்ற SUV. வாகனம், உ.பி. கோண்டாவில் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 18 வயது இளைஞரும் பிஞ்சு குழந்தை ஒன்றும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களும் உறவினர்களும் கரண் பூஷண் சிங்கி பாதுகாப்பு வாகனத்தையும் ஓட்டுநரையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தற்போது கரண் பூஷண் சிங்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான விபத்தால் உறவினர்கள் அழுது கதறி ஓலமிட்ட காட்சிகள் அப்பகுதியையே பதற வைத்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications