லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி. யில் நடமாடும் பள்ளி... கல்வி கற்பிக்க மோடி தொகுதிக்கு பறந்தது பஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தொலைத்தூரங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடமாடும் பள்ளியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

UP Chief Minister Yogi inaugurated a computerized mobile bus classroom

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், படிக்காமல் வேலை பார்ப்பவர்களுக்கு கல்வி கிடைக்கச் செய்வதற்காக நடமாடும் பள்ளிக்கூடம் அமைத்து தர வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

இதன் விளைவாக, உத்தரப்பிரதேசத்துக்கு முற்றிலும் கணிணிமயமான பேருந்து ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஹெச்பி வேல்டு, நிறுவனம் 'HP world on wheels' என்ற பெயரில் கீழ் கணிணி வகுப்பறை பேருந்தினை வடிவமைத்துள்ளது.

UP Chief Minister Yogi inaugurated a computerized mobile bus classroom

இந்த பேருந்து கணிணி வகுப்பறையில் 3டி பிரிண்டர்கள், மொபைல் டிவைசுகள், இணைய வசதி, டிஜிட்டல் பிளாக் போர்டு என
மிகுந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளது.

நடமாடும் பேருந்து பள்ளிகள் சேவை, உத்தர பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இதை தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்து வாரணாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி மற்றும் கணிணி கல்வி சேவையை வழங்கவுள்ளது.

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath inaugurated a computerized mobile bus classroom here on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X