உ.பியில் 1.75 கோடி குடும்பத்தினருக்கு இலவச கேஸ் சிலிண்டர் அளித்த யோகி.. மற்றுமொறு மேஜர் அறிவிப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தீபாவளி பரிசாக 1.75 கோடி பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் அளிக்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் தொடங்கி வைத்தார். ஹோலி பண்டிகையின் போது இதேபோல கேஸ் சிலிண்டரை மக்கள் இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம் எனவும் யோகி அறிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் 1.75 கோடி குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசாக இலவசமாக கேஸ் சிலிண்டர் அளிக்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி உஜ்வான் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தினருக்கு இலவசமாக கேஸ் சிலிண்டரை நிரப்பிக்கொள்ள முடியும் என்று அறிவித்த யோகி ஆதித்யநாத், ஹோலி பண்டிகையின் போது இதே போன்ற பரிசு, அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் கண்டிப்பாக தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும். தீபாவளி பரிசாக மக்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் நிரப்பிக் கொள்ளும் இந்த திட்டத்திற்காக, உத்தர் பிரதேச அரசு ரூ.2,312 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-
கடந்த 2022 ஆம் ஆண்டு லோக் கல்யாண் சங்கல்ப யாத்திரையின் போது அளித்த மற்றுமொறு வாக்குறுதியை தனது அரசு நிறைவேற்றியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்களுக்கு கேஸ் இணைப்பை பெற முடியாத சூழல் இருந்தது. எரிவாயு இணைப்பு கிடைத்தாலும் கூட சிலிண்டரை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. பல நேரங்களில் போலீசார் காத்திருந்த மக்கள் மீது தடியடி கூட நடத்திய நிலை இருந்தது.
ஏழை மக்கள் கேஸ் சிலிண்டரை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைதான் இருந்தது. விறகு அடுப்பால் ஏற்படும் புகையால் பல நோய்களுக்கும் ஆட்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி உஜ்வாலா திட்டத்தை தொடங்கிய 2016 ஆம் ஆண்டு நாட்டில் எரிவாயு உருளைக்கு நிலவிய தட்டுப்பாடு தீர்ந்தது" என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications