கோரக்பூரில் உ.பி. முதல்வர் யோகி வழிபாடு- பெங்களூருவில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட்டனர்!
லக்னோ: நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் கோரக்நாத் ஆலயத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார்.

கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை இன்று முதல் திறக்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் ஆலயத்தில் இன்று காலை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து வழிபட்டார். உ.பி.யின் சம்பாலில் சாமுண்டா கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட்டனர். லக்னோ யாகியாகஞ்ச் குருத்வாராவிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

டெல்லியில் ஜமா மசூதி இன்று காலை திறக்கப்பட்டது. டெல்லி கெளரிசங்கர் கோவில், ஜன்தேவாலன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வழிபட்டனர்.

Recommended Video
கர்நாடகாவிலும் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. பெங்களூரு பசவன்குடியில் உள்ள ஶ்ரீ தொட்ட கணபதி கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசைகளில் நின்று வழிபட்டனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications