உலகிலேயே உயரமானது.. அயோத்தியில் வருகிறது பிரம்மாண்ட ராமர் சிலை.. வைரல் புகைப்படம் வெளியானது!
உத்தர பிரதேசத்தில் நிறுவப்பட உள்ள பெரிய ராமர் சிலையின் வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிறுவப்பட உள்ள பெரிய ராமர் சிலையின் வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகிலேயே இது மிகப்பெரிய சிலையாக வடிவமைக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் வருவதை அடுத்து இந்த பிரச்சனையை இந்துத்துவா அமைப்புகள் மீண்டும் கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையிலதான் உத்தர பிரதேசத்தில் ராமர் சிலை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.

ராமருக்கு சிலை
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமருக்கு சிலை வைக்க திட்டமிட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் சராயு நதிக்கரை ஓரத்தில் இந்த ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. மிகவும் பிரமாண்டமாக இந்த சிலையை கட்ட இருக்கிறார்கள்.

உயரம் என்ன
இந்த சிலை அதிகாரப்பூர்வ மாடல் தற்போது வெளியாகி உள்ளது. இது 220 மீட்டர் உயரம் கொண்டது. இதன் காலுக்கு கீழ் உள்ள மேடை 50 மீட்டர் உயரமும், உடல் 151 மீட்டர் உயரும், மேலே கிரிடம் 20 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் மொத்த உயரம் 221 மீட்டர் உயரம் இருக்கும்.

கூடுதல் சிறப்பு
ராமர் கோவில் இல்லாமல் இந்த சிலை தனி சுற்றுலாதலமாக இருக்கும். இந்த சிலை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்கு கீழ் நிறைய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

எப்போது திறக்கப்படும்
இதற்கான மண் சோதனைகள் நடந்து வருகிறது. காற்றின் வேகம் அங்கு எப்படி இருக்கிறது என்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே உயரம்
இந்த சிலை நிறுவப்பட்டால் இதுதான் உலகிலேயே உயரமான சிலையாக இருக்கும். குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி சில வாரம் முன் திறந்து வைத்தார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity) என்று அழைக்கப்படுகிறது.இந்த சிலைதான் உலகிலேயே தற்போது உயரமான சிலை ஆகும். இந்த நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications