'ஹைவேஸால் வார்த்தைப்போர்' - அகிலேஷ் யாதவ் போட்ட ஒரு ட்வீட் - குட்டுவெளிப்பட்டு போன பாஜக எம்.பி!
லக்னோ: உத்தரப்பிரதேச நெடுஞ்சாலை குறித்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்த கருத்து பொய் என அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கிறது. மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்துகொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை அறிய நாடே காத்துக்கொண்டிருக்கிறது.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. பாஜக-வை ஆதரித்து பிரசாரம் செய்ய 30 மேற்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உத்தரப்பிரதேசத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், பாஜக-வின் பெங்களூர் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா உத்தரப்பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
|
தேஜஸ்வி சூர்யா
பாஜக எம்.பிதேஜஸ்வி சூர்யா, "லக்னோவில் இருந்து கன்னௌஜ்க்கு யோகியின் அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறேன்" என ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அடுத்து, 1947 முதல் 2017 வரை உத்தரப்பிரதேசத்தில் 467 கிலோமீட்டர் நெடுஞ்சாலை தான் போடப்பட்டது. அதுவே ஆதித்யநாத் ஆட்சியில் 1321 கிலோமீட்டர் சாலை போடப்பட்டது. இது எக்ஸ்பிரஸ் பிரதேஷ் என பதிவிட்டிருந்தார்.
|
அகிலேஷ் யாதவ்
அதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரிலேயே பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த அகிலேஷ், "விளக்கின் கீழ் இருள் இருப்பதை ஒருவர் கேள்விப்பட்டிருப்பார். பாஜக தலைவர்களின் அறியாமையை பார்க்கும்போது, 'சூர்யா' என்றால் சூரியனுக்கு கீழே உள்ள இருள் என்று சொல்லலாம்.
|
நெடுஞ்சாலை
ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை குறித்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா வானளாவப் புகழ்ந்து பேசும்போது, அது எங்களால் உருவாக்கப்பட்டது என அவர் அறிந்திருக்க வேண்டும். யோகி ஆதித்யநாத் காலத்தில் இந்த விரைவுச்சாலை போடப்படவில்லை. இதற்கும் திறப்பு விழா நடத்தி விடாதீர்கள்" என பாஜக எம்பி தேஜஸ்வி யாதவுக்கு பதிலளித்தார் அகிலேஷ் யாதவ்.

மாறி மாறி ட்வீட்
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் பொய் சொன்னதாக தெரிவித்ததும், மீண்டும் ஒரு ட்வீட் செய்தார் தேஜஸ்வி சூர்யா, "கவிஞராக இருக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, உத்தரப்பிரதேச மக்களுக்காக அதிக அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்கியிருக்க வேண்டும். 2012க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் பயனற்றவராக யார் இருந்தார் என்று உத்தரப்பிரதேச மக்களுக்கு இப்போது தெரியும். அதே விரைவுச் சாலையில் சமாஜ்வாடி கட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துள்ளனர் என ட்வீட் செய்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications