'வீட்டுக்கு ஓருவருக்கு அரசு வேலை..' - உபி பிரசாரத்தில் வாக்குறுதியை அள்ளி வீசிய யோகி ஆதித்யநாத்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஏற்கெனவே நான்கு கட்ட தேர்தல் முடிந்தநிலையில்,நேற்று ஐந்தாவது கட்ட தேர்தல் நடந்தது.

இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

2017ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. யோகி ஆதித்யநாத் உபி முதல்வராக பொறுப்பேற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்ததால், மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் திட்டத்தை தொடங்கினார் யோகி ஆதித்யநாத்.

வெற்றி

வெற்றி

மத்தியில் உள்ள பாஜக எதிர்பார்த்ததைவிட உத்தரபிரதேசத்தில் வேகமாக வளரத்தொடங்கியது பாஜக. 2019ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள். விவசாயிகள் பிரச்சனை, லக்கிம்பூர் விவகாரம், வேலையில்லா திண்டாட்டம் என பல எதிர்ப்புகளுடன் இந்த தேர்தலை பாஜக சந்தித்து வருகிறது.

 வேலை இல்லா திண்டாட்டம்

வேலை இல்லா திண்டாட்டம்

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருப்பதாகவும், இளைஞர்கள் பலர் வெளி மாநிலங்களுக்கு கூலிக்கு செல்வதாக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டின. அதேபோல் சுயதொழில் செய்வோருக்கு ஏதுவான மாநிலமாக உபி இல்லாததையும் அவர்கள் கண்டித்தார்கள். கடன் பிரச்சனையால் பல சுய தொழில் செய்யும் தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்தனர்.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை

இதெல்லாம் யோகி அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. இதனால், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற வாக்குறுதியை தற்போது அறிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத். கோரக்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ''உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயமாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் அல்லது சுயதொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளும்'' என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+