அடேங்கப்பா.. அடியோடு மாறும் அயோத்தி! மிகப்பெரிய திட்டத்தை அசால்ட்டாக செயல்படுத்தும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், இந்நகரை சுற்றுலா நகரமாக மட்டுமல்லாது, மிகப்பெரிய வணிக நகரமாகவும் மாற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்கேற்ப அயோத்தியின் உட்கட்டமைப்புகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அயோத்திக்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பிரச்சாரம் அயோத்தியில் இருந்து புதிய வேகம் பெறுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது இதன் பொருள் கோயில் வளாகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அயோத்தி நகரமே மேம்படுத்தப்படும் என்பதாகும். இதற்காக தொடங்கப்பட்ட திட்டங்கள் 2031ம் ஆண்டுக்கு முன்னர் முடிக்கப்படும். மொத்தமாக 875 சதுர கிமீ பரப்பளவில் இந்த வளர்ச்சி பணிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அயோத்திக்கான தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கிய கட்டிடக் கலைஞரும் நகர்ப்புறத் திட்டமிடுபவருமான திக்ஷு குக்ரேஜா, 21 ஆம் நூற்றாண்டில் உலகத் தரம் வாய்ந்த நகரங்களில் இருக்க வேண்டிய அனைத்து நவீன வசதிகளையும் அயோத்தி கட்டமைப்பில் முன்மொழியப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
நகரின் வளர்ச்சியை பொறுத்த அளவில், ரூ.31,662 கோடி பட்ஜெட்டில் 37 மாநில மற்றும் தேசிய ஏஜென்சிகள் வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைத்துள்ளன. அதேபோல தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.10,000 கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது தவிர உத்தரப் பிரதேசத்தின் பொதுப்பணித் துறையும் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான 34 திட்டங்களைக் கையிலெடுத்துள்ளது.
மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்களும் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. தாஜ், ரேடிசன், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் ஓட்டல்களை கட்டமைக்க முன்வந்திருக்கின்றன. மறுபுறம் சாமானிய மக்களும் பயன்படுத்தும் ஓஒய்ஓ போன்ற நிறுவனங்களும் அயோத்தியை நோக்கி படையெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications