கிராமப்புறங்களை மேம்படுத்த சூப்பர் திட்டம்! நிதி திரட்டுதலில் புதிய முயற்சி.. அசத்தும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்யலாம் என்று மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது கிடையாது. யோகி ஆதித்யநாத்தான் தற்போது இந்த சாதனையை செய்திருக்கிறார். இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பாஜக பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை உத்தரப் பிரதேச அரசு மீது கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் உ.பியில் நடக்கவில்லை. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்தான் நடைபெற்றது. ஆனால் தற்போது முதல் முறையாக உ.பியில் இந்த மாநாடு நடைபெற்றிருப்பது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் 'மாத்ருபூமி' எனும் புதிய திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை செய்யலாம். மாநில அரசின் திட்டங்களுக்கு இவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறிய உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெரும் பணக்காரர்களை உ.பி அரசு அணுகியுள்ளது.
கிராமப்புறங்களை மேம்படுத்த மாநில அரசு 40% நிதியை வழங்கும். சம்மந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களிடம் மீதம் நிதியை திரட்டி அரசின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். தற்போது இந்த திட்டத்திற்கான விரிவான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications