உ.பி.யில் பாஜகவுக்கு செம ஷாக்-4 மணிநேரத்தில் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- அகிலேஷ் கட்சியில் இணைந்தனர்!
லக்னோ: சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மெளரியா மற்றும் 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். ஒரே நாளில் அதுவும் 4 மணிநேரத்தில் மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பாஜக மேலிடத்தை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உ.பி. கருத்து கணிப்புகள்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆனால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் கடும் போட்டியை பாஜகவுக்கு ஏற்படுத்தும் என்றும் அதே கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன.

அகிலேஷ் கட்சியில் பாஜக அமைச்சர்
இந்நிலையில் உ.பி. அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்வாமி பிரசாத் மவுரியா, விவசாயிகளையும் தலித்துகளையும் பாஜக அரசாங்கம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சிறுகுறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரே நாளில் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
ஸ்வாமி பிரசாத் மவுரியாவைத் தொடர்ந்து ரோஷன் லால் வர்மா, பிரஜேஷ் பிரஜாபதி, பகவதி சாகர் ஆகிய 3 பாஜக எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டனர். இதன் பின்னர் 5-வதாக வினய் ஷாக்யா என்ற எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று ஒரே நாளில் அதுவும் 4 மணிநேரத்தில் 5 பாஜக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது அக்கட்சி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் 13 எம்.எல்.ஏக்கள் விலகல்?
உ.பி.யில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருப்பது தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உ.பி.யில் மேலும் 13 பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணையப் போகின்றனர் என கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications