"சீரழிச்சிட்டாரு".. அப்பா, அரசியல் பிரமுகர்கள் என 28 பேரால் பாலியல் வன்கொடுமை.. கதறிய 17 வயது சிறுமி

பெற்ற மகளை பலாத்காரம் செய்த அப்பா உட்பட 28 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: 17 வயது சிறுமியை அவரது அப்பா, மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட 28 பேர், பல வருடங்களாகவே பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... இப்படி ஒரு அக்கிரமம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உபியில் நாளுக்கு நாள் வன்முறைகள் தலைதூக்கி வருகிறது.. இந்தியாவிலேயே அதிக அளவு பெண்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும் உபியில்தான் நடந்து வருகிறது.

இதை எதிர்க்கட்சிகள் பலமுறை விமர்சித்தும், கேள்வி கேட்டும், இன்றுவரை அந்த மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.. பெண் குழந்தைகளின் எதிர்காலமும் சிதைந்து கொண்டிருக்கிறது.

 லலித்பூர்

லலித்பூர்

அந்த வகையில் இப்போது மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. உபி மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த மைனர் பெண்.. 17 வயதுதான் ஆகிறது.. இவர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் உள்ள விவரம் இதுதான்: "என் அப்பா ஒரு லாரி டிரைவர்.. நான் 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, டிவியில் ஆபாச படங்களை போட்டு காட்டுவார்.. அந்த படங்களை பார்க்கும்படி என்னை வற்புறுத்துவார்.. பிறகு, என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

 பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.. பிறகு, என்னை ஒருநாள் வெளியில் அழைத்து சென்று புது டிரஸ்கள் வாங்கி தந்தார்.. மகேஷ்புரா எனும் இடத்தில் உள்ள ஒரு வயலில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்... இது பற்றி வெளியே சொன்னால், என்னுடைய அம்மாவை கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்.. அதற்கு பிறகு, என்னை அடிக்கடி வெளியே அழைத்து செல்வார்... ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வைப்பார்..

 மயக்க மருந்து

மயக்க மருந்து

சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து தருவார்.. அதை சாப்பிட்டதும் அரை மயக்கத்தில் விழுந்து கிடப்பேன்.. அப்போது யார் யாரோ வந்து என்னை பலாத்காரம் செய்வார்கள்.. வயிற்று வலியில் துடித்து போவேன்.. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திலக் யாதவ், அந்த கட்சியின் நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியா, பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் ஆஹிர்வார் உட்பட 28 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்... இப்படியே பல வருஷங்களாக கொடுமையை அனுபவித்து வருகிறேன்" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

இந்த புகாரை பார்த்து லலித்பூர் எஸ்பி அதிர்ச்சி அடைந்தார்.. இதுகுறித்து அவர் சொல்லும்போது, "இது மிகவும் அரிதான மற்றும் முக்கியமான வழக்கு.. இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டது.. அதேபோல அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பேட்டி

பேட்டி

இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த திலக் யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு திலக் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, "இதெல்லாம் சுத்த பொய்.. எனக்கு எதிராக யாரோ சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.. இந்த சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தினால், நான் தற்கொலை செய்துகொள்வேன், இந்த வழக்கு தொடர்பாக நியாயமான விசாரணை கோரி மாவட்ட நீதிபதியிடம் மனு ஒன்றை அளிக்கப்போகிறேன்" என்று கூறியுள்ளார்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்நிலையில், சிறுமியின் அப்பா உட்பட சம்பந்தப்பட்ட 28 பேர் மீது போக்ஸோ சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 2020ல், ஹாத்ரசில் 19 வயது பட்டியலின இளம்பெண் ஒருவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் நாடே கொந்தளித்தது..

 சர்ச்சை

சர்ச்சை

அந்த அநியாய மரணத்துக்கு இன்றுவரை நியாயம் எதுவும் கிடைக்காத நிலையில், இன்னொரு கூட்டு பாலியல் வன்கொடுமை, இதே உபியில் அரங்கேறி உள்ளது பெருத்த அதிர்ச்சியை மக்களுக்கு உண்டு பண்ணி வருகிறது. விரைவில் உபியில் தேர்தல் நடக்க உள்ளது.. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக அரசு மும்முரம் காட்டி வரும் நிலையில், பெண்கள் மீதான குற்ற செயல்கள் நிச்சயம் அம்மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+