உன்னாவ் பலாத்கார பெண் கார் விபத்து வழக்கு.. குற்றப்பத்திரிக்கையில் எம்எம்ஏ குல்தீப் சிங் பெயரே இல்லை
லக்னோ: உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அந்த பெண்ணின் உறவினர்கள் உயிரிழந்தனர். அந்த பெண் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் பெயர் சேர்க்கப்படவில்லை
உத்தர பிரதேச மாநில எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் அவரிடம் வேலை கேட்டு வந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மற்றும் இரண்டு உறவுப் பெண்கள் உள்பட 4 பேர் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரைச் சந்திக்க கடந்தசில மாதங்களுக்கு முன்பு சென்றனர்.
அப்போது சாலையில் அவர்கள் சென்ற காரின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் உடன் சென்ற இரு பெண்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் விபத்து அல்ல சதி என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டிதால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றமே நேரடியாக இந்த வழக்கில் தலையிட்டது. வழக்கை சிபிஐயின் வசம் ஒப்படைத்தது. இதையடுத்து எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் இன்று சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் பெயர் சேர்க்கப்படவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications