கமிஷன் தரலைன்னு புல்டோசரில் சாலையை தகர்த்த பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்.. கடும் கோபமான யோகி.. போட்ட ஆர்டர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததார் அளித்த புகாரின் பேரின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவாகரம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்த நிலையில், உடனடியாக சாலையை தேசம் செய்தவரிகளிடம் முழு செலவுக்கான தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறையினர் ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை அமைத்து வரும் ஒப்பந்ததாரரிடம், பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஐந்து சதவீத கமிஷன் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் என கூறிக்கொண்ட நபர்களுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் தரவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜக்வீர் சிங் உள்ளிட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரை கொண்டு வந்த புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர்.
இதையடுத்து உத்தரப்பிரதேசதில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அகற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திதான் நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாக மாறி உள்ளது எதிர்க்கட்சியினர் பலரும் கண்டித்து அறிக்கை விட தொடங்கினர்.
இதையடுத்து இந்த விவகாரம் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சாலையை சேதப்படுத்தியவர்கள் பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து புதிய சாலை அமைக்க ஆகும் முழு தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வரும் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் சிங் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், சாலையை சேதப்படுத்தியதாக 15-20 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் கடந்த அக்டோபர் 3ம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாவட்ட எஸ்பி அசோக் குமார் மீனா, பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் ஜக்வீர் சிங் தலைமையில் சுமார் 20 பேர், கமிஷன் தரவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 2ம் தேதி புல்டோசர் மூலம் சாலையை தோண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றார்.
இதனிடையே மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பாண்டே கூறுகையில், , இந்த வழக்கு தொடர்பாக முழு தகல்களை திரட்டி உள்ளோம். சப் கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில், எம்எல்ஏ வீர் விக்ரம் சிங் கூறுகையில், ஜக்வீர் சிங் என்னுடைய ஆதரவாளரோ அல்லது எனது உதவியாளரோ இல்லை. ஆனால் அவர் பாஜகவைச் சேர்ந்தவர் தான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications