உ.பி. நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி.. சிறையில் விஷம் கொடுத்ததால் மாரடைப்பா? வெடிக்கும் சர்ச்சை!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தை அதிரவைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரிக்கு சிறையில் மெல்லக் கொல்லும் விசம் (Slow Poison) கொடுக்கப்பட்டதாலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக அவரது மகன் உமர் அன்சாரி பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை கிடுகிடுக்க வைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி. 1963-ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட தியாகியின் மகனாகப் பிறந்தவர் முக்தார் அன்சாரி, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நிழல் உலக தாதாவாக உருவெடுத்தார். 1978-ல் தமது 15 வயதில் இருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட தொடங்கியவர் முக்தார் அன்சாரி. 1980களின் மத்தியில்தான் நிழல் உலக தாதாக்களில் ஒருவரான முக்தார் அன்சாரியின் நிஜ முகம் வெளிஉலகத்துக்கு தெரிய வந்தது. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் முக்தார் அன்சாரி மீது பாய்ந்தன.

நிழல் உலக தாதாவாக இருந்து கொண்டே அரசியலிலும் நுழைந்தார் முக்தார் அன்சாரி. 1996-ல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வானார். 2002, 2007 தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2012-ல் குவாமி ஏக்தா தள் என்ற தனி கட்சியையும் தொடங்கி தேர்தலை சந்தித்தார். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வென்றார் முக்தார் அன்சாரி. 2022-ல் அவரது மகன் அப்பாஸ் அன்சாரி, சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
முக்தார் அன்சாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாண்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் முக்தார் அன்சாரியின் உடல் ஒப்படைக்கப்படும்.
கடந்த சில நாட்களுக்கு முக்தார் அன்சாரி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மாரடைப்பு காரணமாக முக்தார் அன்சாரி மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முக்தார் அன்சாரியின் மரணத்தால் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முக்தார் அன்சாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாண்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேட பரிசோதனை நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் முக்தார் அன்சாரியின் உடல் ஒப்படைக்கப்படும்.
இதனிடையே தமது தந்தையின் மரணத்துக்கு காரணமே சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் கலக்கப்பட்ட மெல்லக் கொல்லும் விஷம்- ஸ்லோ பாய்சன் என அவரது மகன் உமர் அன்சாரி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக உமர் அன்சாரி கூறுகையில், 2 நாட்களுக்கு முன்னர் பாண்டா சிறையில் அவரை சந்திக்க சென்றேன். ஆனால் என் தந்தையை சந்திக்க அனுமதிக்கவில்லை. ஏற்கனவே என் தந்தைக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தோம். தற்போது அவரது மரணத்துக்கு காரணமே ஸ்லோ பாய்சன்தான். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம். எங்களது நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளது என்றார். லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் உ.பி.யில் முக்தார் அன்சாரியின் திடீர் மரணம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications