லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு.. உ.பி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கிய பா.ஜ.க!

Google Oneindia Tamil News

லக்னோ: இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் செங்கரின் மனைவிக்கு உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது.

உன்னாவ், ஹாத்ரஸ் போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள், விவசாயிகளின் போராட்டம் ஆகியவை உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது.

அடி தூள் ஸ்டாலின்.. அடி தூள் ஸ்டாலின்.. "புது அரசு" அமையும்வரை.. சட்டம் ஒழுங்கை காக்கணும்.. போலீஸுக்கு ஸ்டிராங் கோரிக்கை

 குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ

குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ

உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்ணின் தந்தையும் மர்மமாக இறந்தார்.

 ஆயுள் தண்டனை விதிப்பு

ஆயுள் தண்டனை விதிப்பு

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான குல்தீப் செங்கர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குல்தீப் செங்காரை குற்றவாளி என தீர்ப்பளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும், இளம்பெண்ணின் தந்தை உயிரிழப்பு தொடர்பாக குல்தீப் செங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .10 லட்சம் அபராதமும் தனியாக விதிக்கப்பட்டது.

 குற்றவாளியின் மனைவிக்கு சீட்

குற்றவாளியின் மனைவிக்கு சீட்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல் வருகிரியா ஏப்ரல் 15 முதல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவு மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்த நிலையில் பாலியல் பலாத்கார குற்றவாளியான குல்தீப் செங்கரின் மனைவி சங்கீதாவுக்கு, ஃபதேபூர் சவுராசி திரிதாயா தொகுதியில் இருந்து போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

 உ.பி அரசுக்கு எதிராக அமையும்

உ.பி அரசுக்கு எதிராக அமையும்

சங்கீதா கடந்த 2016 முதல் 2021 வரை உன்னாவோவின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். பாலியல் பலாத்கார குற்றவாளியின் மனைவிக்கு பாஜக சீட் கொடுத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநில மீதான மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக அமைந்துள்ளது. உன்னாவ், ஹாத்ரஸ் போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள், விவசாயிகளின் போராட்டம் ஆகியவை உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது.

English summary
Former BJP MLA serving life sentence in teen rape case BJP has given a seat to Kuldeep Senkar's wife to contest Uttar Pradesh local body elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X