அயோத்தி: ரூ50 லட்சம் மதிப்பிலான 3,836 விளக்குகளை 'ஆட்டைய' போட்டது யாரு?தேடும் 'ராமஜென்மபூமி' போலீஸ்!
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ50 லட்சம் மதிப்பிலான 3,836 அலங்கார விளக்குகள் திருட்டு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள அயோத்தி ராமஜென்மபூமி போலீசார் இத்தனை ஆயிரம் அலங்கார விளக்குகளை மொத்தமாக 'கொள்ளையடித்து' சென்ற கும்பல் எது? என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்தது. இந்த இடத்தில்தான் கடவுள் ராமர் பிறந்தார் என கூறி 1992-ல் பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்து தகர்த்து தரைமட்டமாக்கினர். இதனால் நாடு முழுவதும் மத வன்முறைகள் வெடித்து ரத்த ஆறு ஓடியது.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோவில் கட்ட ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த அயோத்தி ராமர் கோவிலை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதும் புறக்கணித்தனர்.
அண்மையில் அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரை ஒழுகியதும் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் அயோத்தி ராமர் கோவிலுக்கான ராமர் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ50 லட்சம் மதிப்பிலான அலங்கார விளக்குகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் ராமர் பாதையில் 6,000-க்கும் அதிகமான மூங்கில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை இயக்க புரஜெக்டர்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 3,836 அலங்கார விளக்குகள் திருடப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த விளக்குகளை இயக்குவதற்கான புரஜெக்டர்களும் திருட்டு போயிருக்கின்றன. திருட்டு போன அலங்கார் விளக்குகள் ரூ50 லட்சம் மதிப்பிலானவையாம்.
இந்த திருட்டு தொடர்பாக அயோத்தி ராமஜென்மபூமி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இத்திருட்டு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications