ப்பா.. ஒரே ஆட்டோவில் 27 பேர்.. இந்த வீடியோவைப் பார்க்கும்போது நமக்கே மூச்சு முட்டுதே!
ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்த வீடியோ ஒன்று ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி, அதில் இருந்து 27 பயணிகளை போலீசார் கீழே இறக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் ஒரே காரில் ஒரு குடும்பமே நெருக்கி அமர்ந்து, கடைக்கு செல்லும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும். நிஜத்திலும் இதுபோல், காசை மிச்சப்படுத்துவதற்காக ஒருவர் மடியில் ஒருவர் என இடித்துக் கொண்டு ஒரே ஆட்டோவில் நான்கைந்து பேர் போவதைப் பார்த்திருக்கலாம். சமயங்களில் நீங்களே அனுபவப்பூர்வமாகக்கூட உணர்ந்திருக்கலாம்.
ஆனால், ஒரே ஆட்டோவில் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தமாக 27 பேர் அமர்ந்து பயணம் செய்துள்ளனர் என்றால்.. கேட்கும்போதே மயக்கம் வருகிறதல்லவா!

ஆட்டோ வீடியோ
உத்தரப்பிரதேசம் ஃபட்பூர் என்ற ஊரில் தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில், சாலையில் செல்லும் ஆட்டோ ஒன்றைக் காவலர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். பின்னர், அதன் உள்ளே இருப்பவர்களை வெளியில் வரச் சொல்கின்றனர்.

இப்போவே கண்ணைக் கட்டுதே..
அப்போது முதலில் ஓட்டுநர் பகுதியில் வெளியில் இருந்து வரும் ஒருவர், கூடவே ஒரு சிறுவனையும் வெளியில் இழுத்துப் போடுகிறார். அதன் பின்னர் குழந்தைகள், பெரியவர்கள் என அடுத்தடுத்து வரிசையாக இறங்குகின்றனர். ஆட்டோவை தடுத்து நிறுத்திய காவலர், ‘ஒன்று, இரண்டு'.. என ஆட்டோவில் இருந்து இறங்குபவர்களை எண்ணுகிறார்.

எப்படி சாத்தியம்?
கடைசியில் ஆட்டோ காலியாகும் போது, அதில் இருந்து இறங்கியவர்களின் எண்ணிக்கை 27 என முடிகிறது. ஓட்டுநரையும் சேர்த்துத்தான் இந்த எண்ணிக்கை. ஷேர் ஆட்டோ எனக் கூறப்படும் அந்த ஆட்டோவில் ஓட்டுநரையும் சேர்த்து அதிகபட்சமாக ஏழு பேர் வரைச் செல்ல அனுமதி உண்டு. அவ்வளவு பேர்தான் அதில் உட்காரவும் முடியும். ஆனால் அதில் எப்படி 27 பேர் வந்தனர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

ஏமாற்றுவேலை?
ஒருவேளை படங்களில் காட்டப்படுவது போல், அந்தப் பக்கம் ஏறி இந்தப் பக்கம் இறங்கி என வீடியோவுக்காக நாடகம் ஆடுகிறார்களோ என சந்தேகப்படாமலும் இருக்க முடியவில்லை. காரணம் இந்த வீடியோ மிகவும் தெளிவில்லாமல் உள்ளது. அதோடு வீடியோ எடுக்கப்பட்ட கோணமும், ஆட்டோவின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது. ஆனால், எது எப்படியோ இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர் மக்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications