பயங்கரவாதிகளுக்காக துடிக்கும் இதயங்கள்... சமாஜ்வாதி, காங். மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
லக்னோ: பயங்கரவாதிகளுக்காக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியினரின் இதயங்கள் துடிக்கின்றன என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மார்ச் 7-ந் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். அதன்பின்னர் மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி.யில் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. பஸ்தி என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பயங்கரவாதிகளுக்காக துடிக்கிறது
நாம் பாலகோட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினோம். நமது ஒட்டுமொத்த தேசமே பாலகோட் தாக்குதல்களை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ ஆதாரங்கள் கேட்கின்றன..நமது ராணுவ வீரர்களை சந்தேகிக்கின்றனர். ஏனெனில் அவர்களின் இதயங்கள் பயங்கரவாதிகளுக்காகவே துடிதுடிக்கின்றன.

பாதுகாப்பு கட்டமைப்பு நாசம்
நாட்டை ஆட்சி செய்தவர்கள் நமது பாதுகாப்பு துறை கட்டமைப்பையே சீர்குலைத்துவிட்டனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தனர். இப்போது பாதுகாப்பு காரிடார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது நமது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துகிற வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்திலேயே பாதுகாப்பு காரிடார் அமைக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கி தவித்த 1,000க்கும் மேற்பட்டோர் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய அரசு இரவும் பகலுமாக அவர்களை அழைத்து வருவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உலகின் எந்த மூலையில் பிரச்சனை நிகழ்ந்தாலும் நமது நாட்டின் குடிமக்களை திரும்ப அழைத்து வருவதில் நாம் முன்னுரிமை தந்து வருகிறோம்.

எத்தனால் தயாரிப்பு
நமக்கு எண்ணெய் சுத்தகரிப்பு மையங்கள் இல்லை. அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்வதில்லை. இப்போது கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க இருக்கிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Recommended Video

கொசு, மாஃபியாக்கள் ஒழிப்பு
இதேபோல் பல்லியா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பிராந்தியமும் கொசுக்களாலும் மாஃபியாக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடியோ ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கொசுக்களை ஒழித்து கட்டினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மாஃபியாக்களை ஒழித்துக் கட்டினார் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications