உத்தர பிரதேசத்தில் பரபரப்பு! பாஜகவுக்கு ஆதரவளித்த இஸ்லாமியர்! அடித்தே கொன்ற அண்டை வீட்டார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் பாஜகவுக்கு ஆதரவளித்ததா முஸ்லீம் நபர் அவரது அண்டை வீட்டாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பு, சில பாஜக அமைச்சர்கள் சமாஜ்வாதி பக்கம் வந்தனர்.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

உத்தரப் பிரதேசம்
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், இந்தத் தேர்தலில் மீண்டும் பாஜகவே வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜக 255 இடங்களில் வென்ற நிலையில், சமாஜ்வாதி கட்சியால் 111 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2ஆவது முறையாக அங்கு ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தல் வெற்றியை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் கொண்டாடித் தீர்த்தனர்.

ஜெய் ஸ்ரீ ராம்
இந்நிலையில், யோகிக்கு ஆதரவளித்து, பாஜகவின் வெற்றியை இனிப்பு வழங்கிய கொண்டாடிய இஸ்லாமியர் ஒருவரை அண்டை வீட்டார் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட நபர் பாபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் குஷிநகரில் உள்ள ராம்கோலா அடுத்துள்ள கத்கர்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 20 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. தனது கடையிலிருந்து திரும்பிய போது பாபர், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டுக் கொண்டே வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது அண்டை வீட்டினர் அவரைத் தாக்கியுள்ளனர்.

மோசமான தாக்குதல்
இதனால் அஞ்சிய பாபர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டின் மாடிக்கு ஏறி ஒளிந்து கொண்டுள்ளார். இருப்பினும், அங்கும் அவரை துரத்திச் சென்று தாக்கியதாக பாபரின் மனைவி பாத்திமா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலால் பாபர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் சுயநினைவு இழந்து பாபரை மீட்டு, அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் லக்னோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடந்தது என்ன
பாபர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததால் அவரது அண்டை வீட்டார் ஏற்கனவே அவர் மீது கோபத்தில் தான் இருந்துள்ளனர். கடந்த மார்ச் 10இல் தேர்தல் முடிவுகள் கொண்டாடும் வகையில் பாபர் உள்ளூர் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி உள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என அவரது அக்கம்பக்கத்தினர் ஏற்கனவே பலமுறை எச்சரித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் மிரட்டலைத் தொடர்ந்து, இது தொடர்பாக ராம்கோலா காவல் நிலையத்தைப் புகார் அளித்ததாகவும் இருப்பினும் இந்த புகாரை போலீதார் கண்டுகொள்ளவில்லை என்றும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

போலீசார் ஆக்ஷன்
பாபரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி பாத்திமா அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை வழங்கப்படும் என்று சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் வருண்குமார் பாண்டே தெரிவித்துள்ளார். அதேபோல குஷிநகர் எம்எல்ஏ பிஎன் பதக் பாபரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் அளித்தனர். மேலும், பாபரின் இறுதிச் சடங்குகளிலும் அவர் கலந்து கொண்டார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications