பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரே வாரத்தில் குண்டும் குழியுமான எக்ஸ்பிரஸ்வே சாலை- உ.பி.யில் அதிர்ச்சி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ்வே சாலை ஒரே வாரத்தில் கனமழையால் குண்டும் குழியுமாக பரிதாபமாக காட்சி தருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது புந்தேல்கண்ட் விரைவுச்சாலை. இந்த விரைவு சாலைக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இச்சாலை 28 மாதங்களில் முடிவடைந்துவிட்டது. கடந்த ஜூலை 16-ந் தேதி இந்த விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தரப்பிரதேச விரைவுச் சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணைய உதவியுடன் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச்சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது பின்னர், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படும். சித்திரகூட மாவட்டத்தின் பரத்கூப் அருகே உள்ள கோண்டா கிராமத்தில் NH-35லிருந்து எட்டாவா மாவட்டம் குட்ரெயில் கிராமம் வரை நீட்டிக்கப்பட்டு ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையுடன் இணைக்கப்படுகிறது. இது சித்திரகூடம், பண்டா, மகோபா, ஹமீர்பூர், ஜலான், அவ்ரையா, எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செல்கிறது.
|
பிரதமர் மோடி பெருமிதம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புந்தேல்கண்ட் விரைவுச்சாலையால், சித்ரகூட் பகுதியிலிருந்து தில்லி செல்வதற்கான பயண நேரம் 3-4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது, அதைவிட இந்த சாலையால் அதிக பலன் ஏற்படும். இந்த விரைவுச்சாலை, வாகனங்கள் அதிக வேகத்தில் செல்ல வகை செய்வதோடு மட்டுமின்றி, புண்டேல்கண்ட் முழுவதும் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றார்.
|
புந்தேல்கண்ட் சாலை சேதம்
இந்த நிலையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலை இப்போது மிக மோசமாக சேதமடைந்துள்ளது. அதுவும் பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரே ஒருவாரம்தான் ஆகிறது.. அதற்குள் புந்தல்கண்ட் விரைவு சாலை குண்டும் குழியுமாக காவு வாங்கும் பாதையாக உருமாறி நிற்கிறது. அண்மையில் பெய்த கனமழையால்தான் இந்த சேதம் ஏற்பட்டது. ஆனால் ஒரே ஒரு கனமழையை கூட தாங்க முடியாத அளவுக்கு மோசமாக போடப்பட்டுள்ளதா புந்தல்கேண்ட் விரைவு சாலை என்பது உ.பி. அரசியல்வாதிகளின் கேள்வி.

வறுத்தெடுத்த வருண் காந்தி
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜகவின் வருண் காந்தி, ரூ15,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த விரைவுச் சாலை, 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை . அப்படியானால் இந்த விரைவுச்சாலையின் தரம்தான் என்ன? இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 22, 2022 |
அகிலேஷ் யாதவ் விளாசல்
இதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த மோசமான சாலையின் வீடியோ, போட்டோவை தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முடிவடையாத திட்டங்களை முடித்ததாக காட்டியுள்ளதற்கு இது ஒரு உதாரணம். புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை மிகப் பெரிய மனிதர்கள்தான் திறந்து வைத்தனர். ஆனால் ஒரே ஒரு வாரத்திலே ஊழல் குழிகள் வெளியே வந்துவிட்டன. நல்லவேளை இதில் விமான ஓடுபாதைகளை அமைக்கவில்லை என விளாசியிருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications