நடிகை போல உடல்.. ஆபாச வீடியோ பார்த்து செய்த அசிங்கம்.. உபி கணவன் மீது மனைவி புகார்
லக்னோ: இந்தி நடிகை நோரா ஃபதேகி போல தன் மனைவிக்கு கட்டுடல் அமைப்பை ஏற்படுத்துவதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தினசரி 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வைத்து மனைவியை சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஆபாச வீடியோக்களை பார்த்து முறையற்ற உறவில் ஈடுபட வைப்பதாகவும் அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார். கணவனின் தொடர் டார்ச்சர்கள் தாங்க முடியாமல், மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் கசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷிவம் உஜ்வால். இவருக்கு ஷானு என்பவருடன் கடந்த மார்ச் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இது இரண்டு வீட்டார் பேசி அவர்களின் ஏற்பாட்டில் தான் திருமணம் செய்யப்பட்டது. இதற்காக ஷானுவின் குடும்பத்தினர் சுமார் ரூ.77 லட்சம் செலவிட்டுள்ளனர்.

வரதட்சனை.. வேதனை
ரூ.16 லட்சம் மதிப்பிலான நகை, ரூ.24 லட்சம் மதிப்பிலான ஸ்கார்பியோ, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவை ஷிவம் உஜ்வாலுக்கு வரதட்சனையாக ஷானு குடும்பத்தினர் வழங்கினார்கள். எப்படியோ தங்களின் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகளை ஷானு குடும்பத்தார் செய்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
ஒருபக்கம் ஷிவம் உஜ்வால் மறுபக்கம் அவரின் அம்மா அவருக்கு ஏராளமான கொடுமைகளை கொடுத்ததாக புகார் எழுந்தது. ஷிவம் உஜ்வால் அங்குள்ள அரசுப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தினசரி வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருந்தன. இதனால் ஷானு மிகவும் வேதனையடைந்தார்.
ஆபாச வீடியோ
ஒருகட்டத்தில் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விட்டார். அந்தப் புகாரில் ஷானு, "எனது நிறம் மற்றும் உயரம் ஆகியவற்றை காரணம் காட்டி என் கணவர் என்னை ஒதுக்கி கொண்டே வந்தார். அவருக்கு என்னை விட மற்ற பெண்கள் மீதுதான் ஆர்வம் அதிகம். அவர் யூ-ட்யூப், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை பார்த்து வருகிறார்.
நடிகை நோரா ஃபதேகியை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை போல கட்டுடல் அமைப்பு வரவேண்டும் என்று என்னை தினசரி 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வைத்து கொடுமைப்படுத்தி வருகிறார். ஏதாவது தருணத்தில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் சில தினங்களுக்கு எனக்கு உணவு கொடுக்க மாட்டார்கள். கதவின் அறையை கூட அடைக்கவிட மாட்டார்கள்.
மொத்த குடும்பமும் டார்ச்சர்
மாறி மாறி அனுமதி இல்லாமல் யாராவது என் அறைக்குள் வந்து கொண்டே இருப்பார்கள். சில சமயம் ஷிவம் என்னை அடிக்கவும் செய்வார். அவரின் பெற்றோர் அதை கண்டிக்காமல், என்னை இன்னும் அதிக பணம், நகை, ஆடம்பர துணிகளை வாங்கி தர சொல்வார்கள். இதை ஏற்காததால் என்னை மிகவும் அசிங்கப்படுத்தி, கணவருக்கு என்னை பொறுத்தமில்லாதவர்கள் என்று கூறிவருகிறார்கள்.
நான் குண்டாக, அசிங்கமாக இருப்பதாக சொல்லி என் கணவர் ஷிவம் என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். மேலும் அவர் சில பெண்களுடன் சாட் செய்து கொண்டிருக்கிறார். ஒருமுறை என் சகோதரனை சம்பந்தமே இல்லாமல் திட்டினார்கள். அதைத் கேட்டதற்கே என்னை மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்தனர்.
கர்ப்பம் கவலை
ஆபாச வீடியோக்களை பார்த்து முறையற்ற உறவில் ஈடுபட சொல்லி ஷிவம் டார்ச்சர் செய்கிறார். நான் கர்ப்பமானேன். அந்த மகிழ்ச்சியான தகவலை அவர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, உன்னையே ஏற்கவில்லை. உன் குழந்தையை எப்படி ஏற்பேன் என்று சொல்லி கருக்கலைப்பு செய்ய முயற்சித்தனர். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். அவரின் புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications