லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லவ் ஜிகாத் சட்டம்.. தவித்த கணவன்.. போராடிய இளம் பெண்.. சேர்த்து வைத்த உபி ஹைகோர்ட்.. திருப்பம்

Google Oneindia Tamil News

லக்னோ: 21 வயதான இந்து பெண், முஸ்லீம் ஆணை திருமணம் செய்து கொண்டார், என் சுய விருப்படி திருமணம் செய்து கொண்டேன் என கூறியதை ஏற்று அந்த பெண்ணை கணவனுடன் சேர்ந்து வாழலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அந்த பெண் இப்போது தனது கணவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கொத்வாலியில் 18 வயது நிறைவடையாத ஷிகா என்ற பெண்ணை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த சல்மான் என்ற கரண் கடத்தி திருமணம் செய்துவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்பின்னர் அந்த பெண் ஷிகாவை போலீசார் குழந்தைகள் நலக்குவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அடுத்த ஒரு நாளில் அந்த பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

UP woman reunites with husband as HC says she’s an adult, ‘can live life on her own terms’

இதனிடையே ஷிகா, அலகபாத் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்ஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இளம் பெண் ஷிகா, 18 வயதை நிறைவடைந்தவர் என்பதுடன்,, தனது கணவர் கரணுடன் வாழ விரும்புவதாக வெளிப்படுத்தியுள்ளார் மூன்றாம் தரப்பினரின் தொந்தரவுகள் இன்றி சுதந்திரமாக வாழ விரும்புகிறார். எனவே அவரை கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்கிறோம் என்று உத்தரவிட்டது.

மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் போது.. பாத்திரங்களில் ஒலி எழுப்பி புறக்கணித்த விவசாயிகள்!மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் போது.. பாத்திரங்களில் ஒலி எழுப்பி புறக்கணித்த விவசாயிகள்!

அத்துடன் டிசம்பர் 7ம் தேதி, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, குழந்தைகள் நலக் குழு, அவரை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கண்டித்தது. 1999ம் ஆண்டு அக்டோபர் 4 தேதி பிறந்ததாக பள்ளி சான்றிதழில் இருந்தது ஆதரமாக தாக்கல் செய்யப்பட்டதை ஏற்று பெண்ணை கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

அத்துடன் ஷிகாவின் கணவர் கரண் மீது போடப்பட்ட எப்ஐஆரையும் ரத்து செய்தது. போலீசாரை கண்டித்ததுடன், காதல் தம்பதியை தங்களின் இல்லத்தை அடையும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியது.

English summary
The Allahabad High Court has observed that a 21-year-old woman, who is married to a Muslim man, “has a choice to live her life on her own terms”. She has now reunited with her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X