ஹலாலை டார்கெட் செய்த யோகி அரசு.. உபியில் தடை! சென்னையின் ஹலால் சான்று அமைப்பு மீதும் வழக்கு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழ்களுடன் வரும் உணவு பொருட்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் விற்பனை பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்கியதாக ஒரு நிறுவனம் மற்றும் மூன்று அமைப்புகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹலால் சான்றிதழ்களுடன் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்க உத்தரபிரதேச அரசு பரிசீலித்து வருவதாக தனியார் ஆங்கில நாளிதழுக்கு அம்மாநில அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஹலால் சான்றிதழ் அளித்து வருவதாகவும், இது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்றும் லக்னோவின் ஹஜ்ரத் கஞ்ச் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை ஜாமியத் உலமா ஹிந்த் ஹலால் டிரஸ்ட், புது டெல்லி ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா, மும்பை ஜாமியத் உலமா ஆகியவற்றுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மட்டுமின்றி, "அடையாளம் தெரியாத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள், தேசிய விரோத சக்திகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கும் நபர்கள்" ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லக்னோவைச் சேர்ந்த சைலேந்திர குமார் சர்மா என்பவர் அளித்த புகாரில் போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. அவர் தன்னுடைய புகாரில், "குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே தங்கள் விற்பனையை அதிகரிக்க சில நிறுவனங்கள் சில தயாரிப்புகளில் ஹலால் என சான்றளிக்க தொடங்கியுள்ளன.
இப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள சந்தைகளில் இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் காணலாம், இது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலாகும். இந்த ஹலால் சான்றிதழ்கள் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறிவைத்து இந்த சான்றிதழ்களை தயார் செய்கின்றன. இந்த சான்றிதழ்கள் இடம்பெறாத தயாரிப்புகளின் விற்பனையைக் குறைக்கும் உள்நோக்கம் இதில் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் லாபம் சமூக விரோதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு வழங்கப்படுவதாக நான் சந்தேகிக்கிறேன்.
சைவ பொருட்களான அழகு சாதன பொருட்கள், சோப்புகள், டூத் பேஸ்டுகள் போன்றவற்றுக்கும் கூட ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஹலால் சான்றிதழ் தேவையே இல்லை. இந்த நிறுவனங்கள் வழங்கிய ஹலால் சான்றிதழ்கள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்தக்கூடாது என ஒரு சமூகத்தினரிடையே விளம்பரப்படுத்தப்படுகிறது. இது மற்ற சமூகத்தினரின் வணிகங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் செயலாகும். இது பொருளாதார லாபங்களுக்காக மட்டுமின்றி, சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் செயல். இது நாட்டை பலவீனப்படுத்தும் சதித்திட்டதின் ஒரு பகுதியாகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக லக்னோ போலீஸ், மேற்கண்ட ஹலால் சான்றளிக்கும் நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 120-பி (குற்றவியல் சதி), 153-ஏ (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை ஊக்குவித்தல்), 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்), 384 (அச்சுறுத்தல்), 420 (ஏமாற்றுதல்), 467 (ஏமாற்றுதல்), 468 (ஏமாற்றுவதற்காக மோசடி செய்தல்), 471 (நல்லவர் போல் நடித்து ஏமாற்றுதல்), மற்றும் 505 (பொது அமைதியைக் குலைக்கும் கருத்துக்களை சொல்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications