உத்தர பிரதேச தேர்தல்: அயோத்தி, அலகாபாத் உட்பட.. 61 தொகுதிகளில் 5ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு!
லக்னோ: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 5-வது கட்டமாக 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. '
Recommended Video
இன்று 61 தொகுதிகளில் மொத்தம் 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.24 கோடி பேர் இன்று உத்தர பிரதேசத்தில் வாக்களிக்க உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து 12 மாவட்டங்களில் உள்ள மேலும் 61 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.

அயோத்தி, அலஹாபாத், அமேதி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்க உள்ளது. இந்த 61 தொகுதிகளில் கடந்த 2017 சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.
சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், கௌசாம்பி, பிரயாக்ராஜ், பாரபாகி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி மற்றும் கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ம் தேதி நடக்க உள்ளது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது. 5வது கட்ட தேர்தலில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரத்து தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அங்கு இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 231 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
இன்று 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும். இது போக மீதம் உள்ள 111 தொகுதிகளில் அடுத்த இரண்டு கட்டங்களில் தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications