Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்துறை எனக்கு, ஊரக வளர்ச்சிதுறை உங்களுக்கு..யோகி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு.. யாருக்கு எந்த துறை?

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் உள்துறையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தக்கவைத்துக் கொண்ட நிலையில் துணை முதல்வர் கே.பி.மவுரியாவுக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் துணை முதல்வர்களாக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோரும் அமைச்சர்களும் அன்றே பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் அப்போது துறைகள் ஒதுக்கப்படவில்லை.

யோகிக்கு உள்துறை

யோகிக்கு உள்துறை

இந்நிலையில் தற்போது உபி சட்டம் ஒழுங்கை நேரடியாக கண்காணிக்கும் வகையில் உள்துறையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், ஊரக வளர்ச்சித் துறையும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கும், சக துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கிற்கு சுகாதாரத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்துறை மட்டுமல்லாது வருவாய், தகவல் மற்றும் நியமனத் துறைகள் உள்ளிட்டவற்றை முதல்வர் யோகி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுள்ளார்.

துணை முதல்வர்களுக்கு ஒதுக்கீடு

துணை முதல்வர்களுக்கு ஒதுக்கீடு

மேலும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு ஊரக வளர்ச்சி, உணவு பதப்படுத்துதல், கேளிக்கை வரி, தேசிய ஒருமைப்பாடு ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கிற்கு சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்பது முறை எம்எல்ஏவாக இருந்த சுரேஷ் கன்னாவுக்கு நிதி மற்றும் பார்லிமெண்ட்ரி விவகாரங்கள் பொறுப்பும், உபி பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்குக்கு நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பட்டியல் தயார்

பட்டியல் தயார்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் பேபி ராணி மவுரியா, பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த் சர்மாவுக்கு நகர மேம்பாடு மற்றும் கூடுதல் எரிசக்தித் துறையும், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை ஜெய்விர் சிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூர்ய பிரதாப் ஷாஹி வேளாண்மை அமைச்சராகவும், லக்ஷ்மி நாராயண் சவுத்ரி கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கான அமைச்சராகவும், தரம்பால் சிங் பால்வள மேம்பாடு மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

5 பெண் அமைச்சர்கள்

5 பெண் அமைச்சர்கள்

தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி துறைகள் நந்த கோபால் நந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, பூபேந்திர சவுத்ரி பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும், அனில் ராஜ்பர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். யோகேந்திர உபாத்யாய் உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும், சஞ்சய் நிஷாத் மீன்வளத்துறை அமைச்சராகவும், அசிம் அருண் தாழ்த்தப்பட்டமற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும், தரம்வீர் பிரஜாபதி சிறைகள் மற்றும் ஊர்க்காவல் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

சந்தீப் சிங்குக்கு தொடக்கக் கல்வித் துறையும், குலாப் தேவிக்கு உயர் கல்வித் துறையும், தயாசங்கர் மிஸ்ராவுக்கு உணவுப் பாதுகாப்பு, ஆயுஷ் மற்றும் போக்குவரத்துப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் வேளாண் சந்தைப்படுத்தல் துறைகள் தினேஷ் பிரதாப் சிங்குக்கும், நரேந்திர காஷ்யப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஜெய் இந்திர பிரதாப் சிங் ரத்தோர் ஒத்துழைப்பு அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் அரசில் முன்னாள் அதிகாரியாக இருந்த ஏ.கே.சர்மா நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அப்னா தளம் (எஸ்) தலைவர் ஆஷிஷ் படேல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+