‛‛எப்படி நசுக்குறாங்க’’.. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை புகழ்ந்த யோகி ஆதித்யநாத்.. என்ன சொன்னார்?
லக்னோ: காசா மீதான இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தி வருவதை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி பேசியுள்ளார். தாலிபானி மனநிலையை இஸ்ரேல் நசுக்குவதாக அவர் புகழ்ந்துள்ளார்.
கடந்த மாதம் அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர். 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் இறந்தனர். மேலும் 230 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.
இதையடுத்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி விட்டதாக கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அதோடு காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் தரப்பில் 8,500 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தான் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மோதலை கைவிட்டு சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டித்தார். அதேவேளையில் சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய இந்திய வெளியுறவுத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பொதுக்கூட்டத்தில் பேசியபோது யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ‛‛ஹனுமானின் கடாயுதத்தால் மட்டுமே தாலிபான்களை ஒழிக்க முடியும். இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் தாலிபானி மனநிலையை காசாவில் எப்படி நசுக்கி வருகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். '' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications