முதலிரவு அறைக்குள் ஆசையாக சென்ற புதுமணத் தம்பதி.. உணவில் விஷமா.. போலீஸார் விசாரணை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலிரவு அறையில் புதுமணத் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மரணத்திற்கு என்ன காரணம் என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் பைராச் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான பிரதாப் யாதவ். இவருக்கும் 20 வயதான புஷ்பாவுக்கும் கடந்த மே 30 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் இரவு முதலிரவுக்காக ஆசையாக அறைக்குள் சென்றனர்.

இதையடுத்து அடுத்த நாள் காலை நீண்ட நேரமாக அவர்கள் இருவரும் வெளிவராததால் உறவினர்கள் கதவை தட்டியும் போனில் அழைத்தும் பார்த்தனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து கதவை உடைத்து பார்த்த போது இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கு வந்து ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றாலும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவருக்கும் இரவு உணவில் யாராவது விஷம் வைத்துக் கொடுத்தனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தம்பதியின் உள்ளுறுப்புகளை போலீஸார் ஆய்வுக்காக சேமித்து வைத்துள்ளார். மேலும் அந்த அறையை ஆய்வு செய்த போது அங்கு சீலிங் ஃபேன் கூட இல்லாதது தெரியவந்தது. மேலும் காற்றோட்டம் இல்லாததால் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இருவரது பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தால் அவர்கள் மாரடைப்பால் இறந்ததாக குறிப்பிடப்பிட்டுள்ளது. எனவே அவர்கள் இருவரும் காற்றோட்டம் இல்லாத அறையில் காற்று போதாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களது உடலில் காயங்களோ இருவரையும் வலுக்கட்டாயமாக அறைக்குள் அனுப்பியதற்கான தடயங்களோ ஏதும் இல்லை என்கிறார்கள்.
புதுமண தம்பதி தங்களது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே மர்மமான முறையில் மரணமடைந்திருந்தாலும் அவர்களது உறவினர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என போலீஸார் தெரிவிக்கிறார்கள். முதலிரவு அறைக்குள் ஆசையாக சென்ற தம்பதி இப்படி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications