Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோட்டா துளைக்க.. ரத்த வெள்ளத்தில் மிதந்த தலித் மாணவி.. போட்டோ எடுத்து.. வேடிக்கை பார்த்த உ.பி மக்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 21 வயது தலித் பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொது மக்கள் பலரும் வேடிக்கை பார்த்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு மிக மோசமாகிக்கொண்டு இருக்கிறது. அங்கே ரவுடிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகம் ஆகும் நிலையில் இன்னொரு பக்கம் போலீசார் என்கவுண்டர் செய்யும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன.

Uttar Pradesh Crime News: Why people were just watching the day light murder of a 21 year old dalit girl?

என்னதான் போலீஸ் என்கவுண்டர் செய்தாலும் அங்கே குற்றச்செயல்கள் குறையவில்லை. அந்த வகையில் நேற்று உத்தர பிரதேசத்தில் தலித் மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில் இருக்கும் எய்ட் என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

அங்கே இருக்கும் ராம் லகான் படேல் மகாவித்யாலயா என்ற கல்லூரியில் படித்து வந்தார் ரோஷினி அஹிர்வர். 21 வயதான இவர் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார்.

எய்ட் சாலையில் சென்று கொண்டு இருந்த ரோஷினியை இரண்டு பேர் பைக்கில் பின் தொடர்ந்து உள்ளனர். பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த அவர்கள்.. நாட்டு துப்பாக்கி ஒன்றால் அந்த மாணவியை சரமாரியாக சுட்டுக்கொன்று உள்ளனர்.

ராஜ் அஹிர்வர் என்ற இளைஞர் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் ரோஷினியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பல நாட்களாக ரோஷினி பின் அவர் சுற்றி இருக்கிறார்.

இறுதியில் ரோஷினி முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ராஜ் ரோஷினியை கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வேடிக்கை பார்த்த மக்கள்: இதில் கொடூரம் என்ன வென்றால்.. காலை 11 மணிக்கு இந்த சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்து உள்ளது. ரோஷினியை சுட்டுவிட்டு அங்கேயே துப்பாக்கியை போட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினார்கள்.

அங்கே இருந்த மக்கள் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வேடிக்கை பார்த்து உள்ளனர். அங்கே இருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அந்த மாணவியை துப்பாக்கி தோட்டாக்கள் சுட்டதை உறுதி செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று உள்ளனர் இரண்டு இளைஞர்களும்.

30 நிமிடம் அதன்பின் 30 நிமிடம் அங்கேயே அதே பெண்ணின் உடல் கிடந்தது உள்ளது. 30 நிமிடமும் மக்கள் அந்த உடலை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து அதை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

போலீஸ் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தூரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் வர 30 நிமிடத்திற்கும் மேல் ஆகி உள்ளது.

Uttar Pradesh Crime News: Why people were just watching the day light murder of a 21 year old dalit girl?

கொலை: ராஜ் அஹிர்வர் என்ற இளைஞர் மீது அந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கே கிடந்த துப்பாக்கியும் ஆதாரமாக எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டு சாலையில் கிடைக்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க பரவி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+