முன்ன மாதிரி ஜெயிக்க முடியாது? பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாகும் "'ஓபிசி".. யோகிக்கு எதிர்பாராத சிக்கல்!
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் இந்த முறை இடைநிலை சாதியினர் வாக்குகள்தான் தேர்தல் முடிவுகளை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் அளவிலான இடை நிலை சாதியினர் வாக்குகள் அப்படியே ஸ்விங் வாக்குகளாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
பாஜகவில் இருந்து 12க்கும் அதிகமான ஓபிசி தலைவர்கள் வெளியேறி உள்ளனர். சுவாமி பிரசாத் மவுரியா போன்ற மிக வலுவான இடைநிலை ஜாதி எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து உள்ளனர். இதனால் உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் ஓசி vs ஓபிசி என்று மாறி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் முஸ்லீம் vs இந்து என்று இருக்க வேண்டும் என்றுதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பினார். ஆனால் சமாஜ்வாதியோ அங்கு தேர்தல் களத்தை ஓசி vs ஓபிசி, எஸ்சி, முஸ்லீம் என்று மாற்றி வருகிறார். ஓபிசி, எஸ்சி, முஸ்லீம் அடங்கிய பெரிய கூட்டணியை அகிலேஷ் யாதவ் உருவாக்கி வருகிறார்.

ஓபிசி பிரிவு கொதிப்பு தொடங்கியது எப்போது?
உத்தர பிரதேசத்தில் இருக்கும் பெருவாரியான ஓபிசி பிரிவினர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த அதிருப்தி இப்போது தொடங்கிவில்லை. 2017ல் ஆதித்யநாத் அகிலேஷ் யாதவின் முதல்வர் மாளிகையில் குடியேறிய போதே தொடங்கிவிட்டது. அகிலேஷ் இருந்த வீடு என்பதால் அதை யாகம் நடத்தி "சுத்தம்" செய்தார் ஆதித்யநாத். அதாவது சாதி ரீதியான உன் வீட்டில் குடியேறும் முன் அதை தூய்மை படுத்த வேண்டும்.. என்று சிறப்பு பூஜை செய்தார்.. அப்போதே யாதவ் பிரிவினர் ஆதித்யநாத் மீது அதிருப்தி அடைந்துவிட்டனர். பல இடைநிலை சாதியினரை இந்த செயலை விரும்பவில்லை.

ஓசி பிரிவினருக்கு வாய்ப்பு
அதன்பின் இடைநிலை சாதியினர் வரிசையாக பல்வேறு அரசு பணிகளில் புறக்கணிக்கப்பட்டனர். அரசு உயர் பதவிகள், முதல்வருக்கு நெருக்கமான பணிகள், மற்ற பவர் புல் பணிகள் எல்லாமே அங்கு பிராமணர்களுக்கும், தாக்கூர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. இது இடைநிலை சாதியினரை பெரிய அளவில் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இஸ்லாமிய எதிர்ப்பு என்ற பிம்பத்தோடு பாஜக அங்கு ஆட்சிக்கு வந்தாலும் யோகி கண்டுகொண்டது என்னவோ ஓசி பிரிவினரை மட்டுமே.. அங்கு ஓபிசி பிரிவினர் மோசமாக புறக்கணிக்கப்பட்டதாக புகார்கள் உள்ளது.

ஓபிசி கொதிக்க வேறு காரணம் உள்ளது
அரசு வேலைவாய்ப்பு மட்டுமின்றி இடைநிலை சாதியினர் வேறு சில விஷயங்களிலும் அதிகம் பாதிக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாக மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் இடைநிலை சாதியினர் அங்கு விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலால் நேரடியாக அதிகம் பாதிக்கப்பட்டது இவர்கள்தான். அதேபோல் வேலைவாய்ப்பு இன்மையும் இவர்களைதான் அதிகம் பாதித்தது. முறையாக ஓபிசி இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது, எதிலும் தங்களுக்கு முன்னரிமை கொடுக்கப்படாதது அம்மாநில ஓபிசி பிரிவினரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

விவசாய போராட்டம்
சில மாவட்டங்களில் தங்களிடம் இருந்த பவர் லகான் இப்போது இல்லை என்று ஓபிசி தலைவர்கள் அங்கு கவலை அடைந்துள்ளனர். அதிலும் விவசாய போராட்டத்தில் அதிகம் கலந்து கொண்டது இந்த இடைநிலை சாதியினர்தான். விவசாய நிலங்களை அதிகம் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதும் இவர்கள்தான். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும் இப்போதும் இவர்கள் மத்தியில் மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி இருக்கிறதாம். பாஜக என்ற வலுவான கட்சியில் இருந்து ஓபிசி பிரிவு அமைச்சர்களே வெளியேற காரணம்.. தங்களை தங்களின் சொந்த மக்களே புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சம்தான்.

எஸ்சி பிரிவினர்
இதெல்லாம் போக ஏற்கனவே அங்கு எஸ்டி பிரிவினர் ... தாங்கள் மனிதர்களாகவே நடத்தப்படவில்லை என்ற கோபத்தில் உள்ளனர். இஸ்லாமியர்களை ஒதுக்கியது போலவே எங்களையும் ஒதுக்குகிறார்கள் என்ற கோபம் அங்கு தலித் பிரிவினர் இடையே உள்ளது. இது எல்லாம் சேர்த்து அங்கு தேர்தலில் ஆதித்யநாத்திற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான ஓபிசி வாக்குகள் பாஜக வசம் சென்றது.
Recommended Video

வெற்றி பெறுவது சிக்கல்?
ஓபிசி வாக்குகள்தான் அங்கு முடிவை தீர்மானித்தது. தற்போது அந்த வாக்குகள் ஸ்விங் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஓபிசி வாக்குகள் ஸ்விங் ஆகும் பட்சத்தில் பல இடங்களில் முடிவுகள் மாறும். ஓசி vs எஸ்சி, முஸ்லீம் இடையிலான மோதலில் ஓபிசி பிரிவு வாக்குகள்தான் முடிவை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த முறை வென்றதை போலவே பாஜக அவ்வளவு எளிதான வெற்றியை இந்த முறை உத்தர பிரதேசத்தில் பெற முடியாது. இந்த முறை பாஜக வென்றாலும் அது அவ்வளவு எளிதான வெற்றியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications