ஏபிபி சி வோட்டர் சர்வே: உ.பியில் ஆதித்யநாத் ஆட்சி எப்படி? பெஸ்ட் முதல்வர் வேட்பாளர் யார்? கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடு நன்றாக இருப்பதாக 41.5 சதவிகிதம் பேர் பதில் அளித்துள்ளனர். ஏபிபி சேனல்- சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் ஆதித்யநாத்தை முன்னிறுத்தி பாஜக கட்சி மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த முறை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாதி கட்சி ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

பகுஜன் சமாஜ் மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும். காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் உத்தர பிரதேச தேர்தல் குறித்து ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.

 சர்வே

சர்வே

முதல்வர் வேட்பாளர் தொடங்கி, பாஜக ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண் வரை பல்வேறு கேள்விகளை எழுப்பி ஏபிபி சி வோட்டர் சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12894 கருத்து கேட்கப்பட்டது. முதல்வர் ஆதித்யநாத் ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் பலர் இதில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதித்யநாத் ஆட்சி

ஆதித்யநாத் ஆட்சி

இந்த கருத்து கணிப்பில், ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் மொத்த செயல்பாடு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு 41.5 சதவிகிதம் பேர் ஆட்சி நன்றாக இருப்பதாக பதில் அளித்துள்ளனர். அதேபோல் 37.4 சதவிகிதம் பேர் ஆதித்யநாத் ஆட்சி மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 21.1 சதவிகிதம் பேர் ஆட்சி ஆவரேஜாக உள்ளது என்றுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் யார்

முதல்வர் வேட்பாளர் யார்

அதேபோல் மக்களுக்கு விருப்பமான முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு 42.8 சதவிகிதம் பேர் ஆதித்யநாத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அகிலேஷ் யாதவ்தான் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்று 32.2 சதவிகிதம் பேர் வாக்களித்து உள்ளனர். மாயாவதிதான் முதல்வர் வேட்பாளர் என்று 15.4 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

இதில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் முகமாக அறியப்படும் பிரியங்கா காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார். பிரியங்காவிற்கு 3.6 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ராஷ்ட்ரிய லோக் டல் கட்சியின் ஜெயந்த் சாவித்திரிக்கு 1.6 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 4.4 சதவிகிதம் பேர் வேறு ஒருவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+