"Madhu ka Panchwa Baccha".. ஆதார் அட்டையில் இப்படியா இருக்கும்.. அதிகாரிகளால் வந்த வினை.. உ.பி ஷாக்
பள்ளி மாணவியை அனுமதிக்க மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
லக்னோ: ஒரு சிறுமிக்கு ஆரம்ப பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வடமாநிலங்களில் நீண்ட காலத்திற்கு பிறகு கல்வி கற்க முனைந்துள்ளனர்.. அந்த வகையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் புதாவுன் என்ற இடத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.. இது ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம் ஆகும்..
உத்தரபிரதேச மாநிலத்தின் பில்சி டெசில் பகுதியை அடுத்துள்ளது ராய்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் தினேஷ்.. இவரது மகள் ஆர்த்தியை, இந்த பள்ளியில் சேர்க்க சென்றுள்ளார்.. ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்த்தியின் ஆதார் அட்டை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.. குழந்தையை சேர்க்க ஆதார் அட்டையா என்று அதிர்ந்து போன தினேஷ், வீட்டுக்கு வந்து ஆர்த்தியின் அட்டையை எடுத்துக் கொண்டு போய் ஆசிரியர்களிடம் கொடுத்தார்.
ஆதார் அட்டையை பார்த்த ஆசிரியர்கள், அதில் ஆர்த்தியின் பெயருக்கு பதில் - மதுவின் ஐந்தாவது குழந்தை என்று அச்சிடப்பட்டு இருந்ததை அதிர்ந்தனர்.. அதாவது, "Madhu ka Panchwa Baccha" என்று அச்சிடப்பட்டிருந்து.. மேலும் அந்த அட்டையில் ஆதார் எண் இடம்பெறவே இல்லை என்று ஆசிரியர்கள் தினேஷிடம் சொல்லி உள்ளனர்.. எனவே, ஆதார் அட்டையில் பெயர் தவறாக உள்ளதுடன், ஆதார் நம்பரும் இல்லை என்று சொல்லி, ஆர்த்திக்கு ஆரம்ப பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.. அப்போது, "ஆதார் அட்டைகள் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளால் உருவாக்கப்படுகின்றன. அவர்களின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டுள்ளது.. வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக அதிகாரிகளிடம் கவனமாக பணியாற்ற உத்தரவிடுகிறோம். இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி தீபா ரஞ்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்,
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications