அரசு பள்ளிகளை மேம்படுத்த மேலும் ஓர் முயற்சி! நிபுன் மதிப்பீட்டு தேர்வை நடத்துகிறது உ.பி அரசு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: 'நிபுன் பாரத் மிஷனை' திறம்பட செயல்படுத்தும் நோக்கத்துடன், யோகி அரசாங்கம் திங்கள்கிழமை முதல் நிபுன் மதிப்பீட்டுத் தேர்வை (NAT) ஏற்பாடு செய்ய உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பள்ளி கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Uttar Pradesh Government conducts the Nipun Assessment Test for the improvement of government schools

'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதை தான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபுன் தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும். இதன் மூலம் எதிர்வரும் 2026-2027ம் ஆண்டிற்குள் அனைத்து மாணவர்களுக்கும் 3 வகுப்பில் முழுமையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருப்பார்கள். இதற்கு சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவி பயன்படுத்தப்படும்.

ஏற்கெனவே பள்ளிகளை மேம்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.

Uttar Pradesh Government conducts the Nipun Assessment Test for the improvement of government schools

இதற்கான திட்டங்களையும் பள்ளிக்கல்வித்துறை தயாரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். அதேபோல சர்வதேச அளவில் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் இந்த திட்டம் உதவும் என ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து உத்தரப் பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் கூறுகையில், "ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'நிபுன் பாரத் மிஷனை' திறம்பட செயல்படுத்தும் நோக்கத்துடன், யோகி அரசாங்கம் திங்கள்கிழமை முதல் நிபுன் மதிப்பீட்டுத் தேர்வை (NAT) ஏற்பாடு செய்ய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+