ஐடிஐ நிறுவனங்களை மேம்படுத்த டாடா நிறுவனத்துடன் உபி அரசு ஒப்பந்தம்.. ரூ.5372 கோடியில் 'மாஸ்' திட்டம்
உலக அளவில் தேவை அதிகம் இருக்கும் தொழில்கள் தொடர்பான பயிலரங்குகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்வது, ஐஐடி மாணவர்களின் வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றுவது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள ஐடிஐ கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, உத்தரபிரதேசத்தில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து குறியீடுகளிலும் முதன்மையாக மாநிலமாக மாற்ற அண்மையில் உறுதியேற்றது. அந்த வகையில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், கல்வியை மேம்படுத்தும் பணிகளையும் உ.பி. அரசு வேகமாக செய்து வருகிறது. இதற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் கல்விக்கும், உள்கட்டமைப்புக்கும் பல மடங்கு நிதியை உபி அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர்களுக்கு உலகம் முழுவதும் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களின் தொழில்திறன் மேம்படுத்தப்படும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது உபி அரசு. இதன் முதற்கட்டமாக, மாநிலத்தில் உள்ள 150 அரசு ஐஐடி கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் உபி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அரசு ஐஐடி மாணவர்களின் தொழில்திறனையும், செயல்திறனையும் மேம்படுத்த ரூ.5472 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 4,282 கோடி டாடா நிறுவனம் முதலீடு செய்யும். மீதமுள்ள 1,190 கோடியை உத்தரபிரதேச அரசு செலவிடும். உலக அளவில் தேவை அதிகம் இருக்கும் தொழில்கள் தொடர்பான பயிலரங்குகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்வது, ஐஐடி மாணவர்களின் வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றுவது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
மேலும், அரசு ஐஐடியில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் படித்து முடிக்கும் மாணவர்கள், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும் உதவி செய்யப்படும். மேலும், கேம்பஸ் இன்டர்வியூ மூலமாகவும் மாணவர்கள் பல்வேறு பெருநிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உத்தரபிரதேச தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications